சினிமா செய்திகள்

விவாகரத்தை கைவிட்டனர் நவாசுதீன் சித்திக்குடன் சேர்ந்த மனைவி + "||" + The wife of Nawazuddin Siddiqui, who abandoned the divorce

விவாகரத்தை கைவிட்டனர் நவாசுதீன் சித்திக்குடன் சேர்ந்த மனைவி

விவாகரத்தை கைவிட்டனர் நவாசுதீன் சித்திக்குடன் சேர்ந்த மனைவி
ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்தவர் நவாசுதீன் சித்திக். இந்தியில் பிரபல நடிகராக இருக்கிறார்.
ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்தவர் நவாசுதீன் சித்திக். இந்தியில் பிரபல நடிகராக இருக்கிறார். ஆலியா என்பவரை நவாசுதீன் சித்திக் 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டு பிரிந்தனர். இதையடுத்து நவாசுதீன் சித்திக்குக்கு ஆலியா விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது நவாசுதீன் சித்திக்கும், ஆலியாவும் விவாகரத்து முடிவை கைவிட்டு ஒன்று சேர்ந்துள்ளனர். இதுகுறித்து ஆலியா கூறும்போது, “சில வாரங்களுக்கு முன்பு எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. குழந்தைகளுடன் இருக்க முடியவில்லை. அப்போது நவாசுதீன் சித்திக் குழந்தைகளை பார்த்துக்கொண்டார். என்னையும் கவனித்துக்கொண்டார். நல்ல தந்தையாக, கணவனாக அவர் இருந்தார். அன்பாக இருக்கிறார். அவரது இன்னொரு பக்கத்தை பார்த்தேன். நடந்ததை மறந்து குழந்தைகளுக்காக சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளோம்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிளவுஸ் தைக்க மறுத்த கணவன்.. தற்கொலை செய்துகொண்ட மனைவி...!
கதவை திறந்து பார்த்தபோது வீட்டின் படுக்கை அறையில் மனைவி இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
2. ஷிகர் தவானை பிரியும் மனைவி: இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்!
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் தவானும், அவரது மனைவி ஆயிஷா முகர்ஜியும் விவாகரத்து செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
3. ஹைதி நாட்டின் அதிபர் சுட்டுக்கொலை; மனைவிக்கு தீவிர சிகிச்சை
ஹைதி நாட்டின் அதிபர் ஜோவெனல் மாய்சே தனது இல்லத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.