சினிமா செய்திகள்

தொழில் அதிபருடன் எனக்கு திருமணமா? கீர்த்தி சுரேஷ் விளக்கம் + "||" + Should I marry a business tycoon? Keerthi Suresh Description

தொழில் அதிபருடன் எனக்கு திருமணமா? கீர்த்தி சுரேஷ் விளக்கம்

தொழில் அதிபருடன் எனக்கு திருமணமா? கீர்த்தி சுரேஷ் விளக்கம்
தொழில் அதிபருடன் எனக்கு திருமணமா? கீர்த்தி சுரேஷ் விளக்கம்.
நடிகை கீர்த்தி சுரேஷ் அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:-

கேள்வி:- இப்போது அதிகம் மெலிந்து இருக்கிறீர்களே?

பதில்:- நான் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துகிறேன். அசைவ உணவுகளை தொடுவது இல்லை. தினமும் யோகா செய்வேன். ஆனாலும் முழுமையாக வாயை கட்டுவது இல்லை. பிடித்த இனிப்புகளை சாப்பிடுவேன். நீச்சல் பயிற்சியும் செய்வேன்.

கேள்வி:- சினிமாவுக்கு வராமல் இருந்திருந்தால்?

பதில்:- நான் பேஷன் டிசைனிங் படித்து இருக்கிறேன். வெளிநாடுகளிலும் பயிற்சி பெற்றேன். நடிகையாகாமல் இருந்திருந்தால் பேஷன் டிசைனிங் தொழிலில் இறங்கி இருப்பேன்.

கேள்வி:- உங்களுக்கு பிடித்த நடிகர்கள்?

பதில்:- விஜய், சூர்யா ஆகியோரை மிகவும் பிடிக்கும்.

கேள்வி:- ஒரு தொழில் அதிபருடன் உங்களுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளதாக செய்திகள் வந்ததே?

பதில்;- அதை பார்த்து ஆச்சரியப்பட்டேன். எங்கிருந்து இந்த தகவல் வெளியானது என்று தெரியாது. எனக்கு அந்தமாதிரி எந்த திட்டமும் இல்லை. இப்போது திருமணம் செய்துகொள்ள நேரமும் இல்லை. எனது சொந்த வாழ்க்கை பற்றி வதந்தி பரப்பாமல் ஏதாவது நல்ல விஷயங்களில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

கேள்வி:- உங்கள் வாழ்க்கையின் பெரிய சாதனை

பதில்:- மகாநதி படத்தில் சாவித்திரியாக நடித்தது பெரிய சாதனை. உயிர் இருப்பதுவரை அதை மறக்க முடியாது.

கேள்வி:- கவர்ச்சியாக நடிக்க மறுக்கிறீர்களே?

பதில்: சினிமாவில் எனக்கென்று சில எல்லைகள் இருக்கிறது. அதை மீற மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. 'மகேந்திரன் கூறிய குற்றச்சாட்டில் உண்மை இல்லை' மக்கள் நீதி மய்யம் விளக்கம்
'மகேந்திரன் கூறிய குற்றச்சாட்டில் உண்மை இல்லை' மக்கள் நீதி மய்யம் விளக்கம்.
2. தி.மு.க. அமைச்சரவையில் 10 துறைகளின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டது ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம்
தி.மு.க. அமைச்சரவையில் 10 துறைகளின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டது குறித்து மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
3. கொரோனா வைரஸ் தொற்றால் இதய, நீரிழிவு நோயாளிகளுக்கு பாதிப்பு அபாயம் அதிகமா? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம்
இதய, நீரிழிவு நோயாளிகள் கொரோனாவால் பாதிக்கப்படும் அபாயம் அதிகமா? என்பது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.
4. கொரோனா பரவல் காரணமாக திறக்க தடை விதிக்கப்பட்ட பெரிய கடைகள் எவை? தமிழக அரசு விளக்கம்
கொரோனா பரவல் காரணமாக திறக்க தடை விதிக்கப்பட்ட பெரிய கடைகள் எவை? தமிழக அரசு விளக்கம்.
5. தமிழகத்தில் கொரோனா தொற்றின் நிலை என்ன? பிரதமர் ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர் விளக்கம்
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நடத்திய அனைத்து முதல்-அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் பங்கேற்று இங்குள்ள தொற்றின் நிலை பற்றி விளக்கம் அளித்தார்.