சினிமா செய்திகள்

தினத்தந்தி தேவதை இதழின் அட்டைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்த ஏ.ஆர்.ரகுமான் + "||" + AR Rahman congratulated Udhayakeerthika by sharing Dinathanthi Devathai magazine cover on social media

தினத்தந்தி தேவதை இதழின் அட்டைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்த ஏ.ஆர்.ரகுமான்

தினத்தந்தி தேவதை இதழின் அட்டைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்த ஏ.ஆர்.ரகுமான்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் தினத்தந்தி தேவதை இதழின் அட்டைப்படத்தை பகிர்ந்து உதயகீர்த்திகாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,

தினத்தந்தி இதழுடன் ஞாயிறு தோறும் பெண்களுக்கான, ‘தேவதை’ சிறப்பு வார இதழ் வெளியாகி வருகிறது. இந்த இதழில் பெண்களின் சுயமுன்னேற்றம், பிரபலங்களின் சிறப்பு நேர்காணல், பெண் சாதனையாளர்கள் குறித்த கட்டுரைகள் உள்ளிட்டவை வெளியாகி வருகின்றன.

கடந்த மாதம் 28 ஆம் தேதி வெளியான தேவதை வார இதழ், ‘விண்வெளி பயணத்திற்கு பயிற்சி பெறும் உதயகீர்த்திகா’ என்ற அட்டைப்படத்துடன் வெளியாகி இருந்தது. இந்த இதழில் விண்வெளி பயணத்திற்கு பயிற்சி பெறும் தமிழகத்தைச் சேர்ந்த உதயகீர்த்திகா பற்றிய கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், நேற்று மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் தினத்தந்தியின் தேவதை வார இதழின் அட்டைப்படத்தை வெளியிட்டு, கைத்தட்டும் ‘எமோஜி’யுடன் உதயகீர்த்திகாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து உதயகீர்த்திகாவுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. புகாா்பெட்டி
தினத்தந்தி புகாா்பெட்டி
2. புகாா் பெட்டி
தினத்தந்தி pugar petti
3. புகாா் பெட்டி
தினத்தந்தி புகாா் பெட்டி
4. pugar petti
தினத்தந்தியின் pugar petti
5. ‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.