சினிமா செய்திகள்

பிரபல இந்தி நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா + "||" + Corona to famous Hindi actor Ranbir Kapoor

பிரபல இந்தி நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா

பிரபல இந்தி நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா
கொரோனா தொற்றில் நடிகர், நடிகைகளும் சிக்குகிறார்கள். பிரபல இந்தி நடிகர் ரன்பீர் கபூருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்றில் நடிகர், நடிகைகளும் சிக்குகிறார்கள். பிரபல இந்தி நடிகர் ரன்பீர் கபூருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவருக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார். ரன்பீர் கபூரின் தாயும், நடிகையுமான நீது கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைத்து விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்படுகிறது. உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. அனைவரின் வாழ்த்துக்கும் நன்றி'' என்று கூறியுள்ளார். ஏற்கனவே நடிகர்கள் அமிதாப்பச்சன், சூர்யா, சரத்குமார், விஷால், பிருதிவிராஜ், அபிஷேக் பச்சன், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், தமன்னா, ராய் லட்சுமி, நிக்கி கல்ராணி, சுமலதா, ஐஸ்வர்யா அர்ஜுன், இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்ட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. மதுரையில் 27 பேருக்கு கொரோனா
மதுரையில் 27 பேருக்கு கொரோனா
2. கர்நாடகத்தில் புதிதாக 1,708 பேருக்கு கொரோனா- 36 பேர் பலி
கர்நாடகத்தில் புதிதாக 1,708 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
3. புதிதாக 22 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
4. புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
5. கொரோனா தினசரி பாதிப்பு குறைய தொடங்கியது
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு குறைய தொடங்கியது. புதிதாக 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.