சினிமா செய்திகள்

சர்வதேச திரைப்பட விழாவில் 'கட்டில்' + "||" + 'Cot' at International Film Festival

சர்வதேச திரைப்பட விழாவில் 'கட்டில்'

சர்வதேச திரைப்பட விழாவில் 'கட்டில்'
கட்டில் என்ற பெயரில் தயாராகி உள்ள படத்தை இ.வி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
கட்டில் என்ற பெயரில் தயாராகி உள்ள படத்தை இ.வி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாகவும் நடித்துள்ளார். சிருஷ்டி டாங்கே நாயகியாகவும், டைரக்டர் பாலசந்தர் மருமகள் கீதா கைலாசம், எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன், நிதிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் புனே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது. இதுகுறித்து இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு கூறும்போது, ''மராட்டிய மாநில அரசு சார்பில் புனேயில் நடைபெறும் 19-வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக கட்டில் படம் தேர்வாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பட விழாவில் 2 தடவை கட்டில் படத்தை திரையிட உள்ளனர். தொடர்ந்து மும்பை, லாத்தூர், நாக்பூர் திரைப்பட விழாக்களிலும் கட்டில் படம் திரையிடப்பட உள்ளது. 3 தலைமுறையாக பாதுகாத்து பராமரிக்கப்பட்டு வரும் ஒரு கட்டிலை பற்றிய கதையே இந்த படம். குடும்ப உறவுகளை பற்றிய உணர்வுப்பூர்வமான படமாக தயாராகி உள்ளது'' என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை எழும்பூரில் உள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சர்வதேச தரச்சான்று
சென்னை எழும்பூரில் உள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அளிக்கப்பட்ட சர்வதேச தரச்சான்றை டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
2. ‘மகாமுனி’ படத்துக்காக அடுத்தடுத்து 2 சர்வதேச விருதுகளை வென்ற மகிமா நம்பியார்
சர்வதேச பட விழாக்களில் சிறந்த துணை நடிகைக்கான விருது வென்றுள்ள நடிகை மகிமா நம்பியாருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
3. நடிகை மகிமாவுக்கு சர்வதேச விருது
ஆர்யா நடித்து 2019-ல் வெளியான படம் மகாமுனி. இதில் மகிமா நம்பியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
4. கனடா சர்வதேச டென்னிஸ்: கமிலா, மெட்விடேவ் ‘சாம்பியன்’
கனடா சர்வதேச டென்னிஸ்: கமிலா, மெட்விடேவ் ‘சாம்பியன்’.
5. கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து சர்வதேச போட்டியில் கலந்து கொள்ள குமரி வீராங்கனை டெல்லி பயணம்
கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து சர்வதேச போட்டியில் கலந்து கொள்வதற்காக குமரி வீராங்கனை போலந்து செல்கிறார். இதற்காக இரவோடு இரவாக டெல்லிக்கு புறப்பட்டார்.