சினிமா செய்திகள்

தேர்தல் காரணமாக சிவகார்த்திகேயன் படம் ரிலீஸ் தள்ளிவைப்பு + "||" + Sivakarthikeyan film release postponed due to election

தேர்தல் காரணமாக சிவகார்த்திகேயன் படம் ரிலீஸ் தள்ளிவைப்பு

தேர்தல் காரணமாக சிவகார்த்திகேயன் படம் ரிலீஸ் தள்ளிவைப்பு
சட்டமன்ற தேர்தல் காரணமாக பெரிய பட்ஜெட் படங்களை திரைக்கு கொண்டு வர தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள்.
சட்டமன்ற தேர்தல் காரணமாக பெரிய பட்ஜெட் படங்களை திரைக்கு கொண்டு வர தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள். பிரசாரம் மற்றும் பொதுக்கூட்டங்களால் மாலை, இரவு காட்சிகளுக்கு ரசிகர்கள் வரத்து குறைந்து வசூல் பாதிக்கும் என்றும், சுவரொட்டிகள் ஒட்டி படங்களுக்கு விளம்பரம் செய்வது கஷ்டம் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். இந்த நிலையில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தின் ரிலீசை தள்ளிவைப்பதாக பட நிறுவனம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்த படத்தை நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை எடுத்து பிரபலமான நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார். தற்போது விஜய் நடிக்கும் புதிய படத்தையும் இயக்க உள்ளார். டாக்டர் படம் வருகிற 26-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவித்து இருந்தனர். படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருந்த நிலையில், தேர்தல் காரணமாக வசூல் பாதிக்கும் என்பதால் ரிலீசை தள்ளிவைத்துள்ளனர். டாக்டர் படம் வெளியாகும் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு
மோசடி வழக்குகளில் முன்ஜாமீன் கேட்டு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2. முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஸ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு, அதுல்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
3. சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
4. ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
5. வனம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
அறிமுக இயக்குனர் ஸ்ரீகண்டன் ஆனந்த் இயக்கத்தில் வெற்றி, அனுசித்தாரா நடிப்பில் உருவாகி உள்ள ‘வனம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.