நடிகைகளுக்கு குறைவான சம்பளம் சமந்தா வருத்தம்


நடிகைகளுக்கு குறைவான சம்பளம் சமந்தா வருத்தம்
x
தினத்தந்தி 11 March 2021 1:10 AM GMT (Updated: 11 March 2021 1:10 AM GMT)

நடிகர்-நடிகைகள் படத்துக்கு படம் சம்பளத்தை உயர்த்துகிறார்கள். ஆனாலும் கதாநாயகர்கள் சம்பளத்தை ஒப்பிடும்போது தங்களின் சம்பளம் பல மடங்கு குறைவாக இருப்பதாக கதாநாயகிகள் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர்-நடிகைகள் படத்துக்கு படம் சம்பளத்தை உயர்த்துகிறார்கள். ஆனாலும் கதாநாயகர்கள் சம்பளத்தை ஒப்பிடும்போது தங்களின் சம்பளம் பல மடங்கு குறைவாக இருப்பதாக கதாநாயகிகள் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள். இந்தி நடிகைகள் அதிகபட்சமாக ஒரு படத்துக்கு ரூ.13 கோடி வரை வாங்குகிறார்கள். தென்னிந்திய நடிகைகளில் நயன்தாரா முதல் இடத்தில் இருக்கிறார். ஒரு படத்துக்கு அவர் ரூ.4 கோடி வரை வாங்குகிறார் என்கின்றனர். இந்த நிலையில் நடிகைகளுக்கு சம்பளம் குறைவாக கொடுக்கப்படுவதாக சமந்தா வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “நடிகைகளுக்கு சம்பளம் குறைவாகவே தரப்படுகிறது. ஒரு நடிகை முதல் 3 கதாநாயகிகளில் ஒருவராக இருந்தாலும் அவருக்கு கொடுக்கும் சம்பளம் குறைவுதான். அந்த நடிகை வாங்கும் சம்பளம் முதல் 20 நடிகர்கள் பட்டியலில் கூட இல்லாத கதாநாயகர் வாங்கும் சம்பளத்துடன் ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளது. நடிகைகள் தங்களுக்கு சம்பளம் அதிகம் வேண்டும் என்று கேட்டால் பிரச்சினையாக்குகின்றனர். ஆனால் நடிகர் சம்பளம் அதிகம் கேட்டால் உடன்படுகிறார்கள்'' என்றார்.

Next Story