சினிமா செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்ட மோகன்லால் + "||" + Corona vaccinated by Mohanlal

கொரோனா தடுப்பூசி போட்ட மோகன்லால்

கொரோனா தடுப்பூசி போட்ட மோகன்லால்
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது. அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது. அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் தடுப்பூசி போட்டு வருகிறார்கள். பொதுமக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவர் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது. இதுகுறித்து மோகன்லால் கூறும்போது, “கொரோனா தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்திக்கொண்டேன். அரசின் அறிவுரையை ஏற்று அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி சமூகத்தின் பாதுகாப்புக்கானது. கொரோனாவுக்கு விரைவாக தடுப்பு மருந்து கண்டுபிடித்த நிறுவனங்களுக்கும், மருத்துவர்களுக்கும் நன்றி” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. மேலும் ஒருவருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
2. கரூரில் 19 பேருக்கு கொரோனா
கரூரில் 19 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
3. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,677- பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,677- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுளது.
4. கடலூரில் டெங்கு காய்ச்சல்; 9 பேருக்கு பாதிப்பு உறுதி
கடலூரில் டெங்கு காய்ச்சல் பாதித்த 9 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
5. 11-வது மெகா முகாம்: 12 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் நடைபெற்ற 11-வது மெகா தடுப்பூசி முகாமில் 12 லட்சத்து 1,832 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. சென்னையில் 1 லட்சம் பேர் போட்டுக்கொண்டனர்.