சினிமா செய்திகள்

மீண்டும் விக்ரம் ஜோடியாக சிம்ரன் + "||" + Simran paired with Vikram again

மீண்டும் விக்ரம் ஜோடியாக சிம்ரன்

மீண்டும் விக்ரம் ஜோடியாக சிம்ரன்
நடிகர் விக்ரம், கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கோப்ரா படப்பிடிப்பு சமீபத்தில் ரஷியாவில் நடந்தது. இது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.
நடிகர் விக்ரம், கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கோப்ரா படப்பிடிப்பு சமீபத்தில் ரஷியாவில் நடந்தது. இது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்கிறார். இது விக்ரமுக்கு 60-வது படம். இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. விக்ரமுடன் அவரது மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடிக்கிறார். இதில் 2 நாயகிகள் நடிக்க உள்ளனர். ஏற்கனவே வாணி போஜனை ஒரு நாயகியாக தேர்வு செய்து உள்ளனர். இன்னொரு நாயகி தேர்வு நடந்தது. தற்போது சிம்ரனை ஒப்பந்தம் செய்துள்ளனர். ஏற்கனவே விக்ரம் நடித்து திரைக்கு வருவதில் தாமதமாகி உள்ள துருவ நட்சத்திரம் படத்திலும் சிம்ரன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரமின் பிதாமகன் படத்திலும் ஒரு பாடலுக்கு சிம்ரன் நடனம் ஆடி இருந்தார். விக்ரமின் 60-வது படப்பிடிப்பு தொடங்கி உள்ளதாக கார்த்திக் சுப்புராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். இந்த படத்தில் அனிருத் இசையமைப்பதாக இருந்தது. தற்போது அவருக்கு பதில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பதாக அறிவித்து உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. விக்ரம்
‘விக்ரம்’ படப்பிடிப்பு தொடங்கியது கமல்ஹாசனுக்கு வில்லனாக மலையாள நடிகர்.
2. மீண்டும் வில்லியாக சிம்ரன்
தமிழ் திரையுலகில் 1990 மற்றும் 2000-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சிம்ரன் திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கி இருந்து விட்டு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.