சினிமா செய்திகள்

ஆஸ்கர் விருதுக்கு தேர்வான படங்களின் பெயர்களை அறிவிக்கிறார் - பிரியங்கா சோப்ரா + "||" + Nick Jonas and Priyanka Chopra Jonas to announce the 93rd Oscar nominations

ஆஸ்கர் விருதுக்கு தேர்வான படங்களின் பெயர்களை அறிவிக்கிறார் - பிரியங்கா சோப்ரா

ஆஸ்கர் விருதுக்கு தேர்வான படங்களின் பெயர்களை அறிவிக்கிறார் - பிரியங்கா சோப்ரா
ஆஸ்கர் விருதுக்கு தேர்வான படங்களை அறிவிக்கிறார் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அறிவிக்கிறார்.
லாஸ் ஏஞ்சல்ஸ்,

அமெரிக்காவில் 'ஆஸ்கர்' விருதுக்கான இறுதிப் போட்டியில் தேர்வான திரைப்படங்கள் குறித்த அறிவிப்பை பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தன் கணவர் நிக் ஜோனஸ் உடன் இணைந்து வெளியிட உள்ளார்.

சர்வதேச திரைப்பட விருதுகளில், மிகச் சிறந்ததாக 'ஆஸ்கர்' கருதப்படுகிறது. 93வது ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு 23 பிரிவுகளில், இறுதிப் போட்டிக்கு தேர்வான படங்கள் குறித்த அறிவிப்பு வரும் 15ம் தேதி ஆஸ்கர் இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் மூலமாக வெளியிடப்பட உள்ளது.

இது குறித்து, பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தன் கணவரும், அமெரிக்க பாடகருமான நிக் ஜோனஸ் உடன் இணைந்து 'டிக்டாக்' வலைதளத்தில் ஒரு, 'வீடியோ' வெளியிட்டு உள்ளார். அதில் ஆஸ்கர் விருது இறுதிப் போட்டிக்கு தேர்வான திரைப்படங்களை, கணவருடன் இணைந்து அறிவிக்க இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக, அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வாய்ப்பு தமக்கு பெருமை அளிப்பதாக, 'டுவிட்டரில் , பிரியங்கா சோப்ரா குறிப்பிட்டு உள்ளார்.

கொரோனா காரணமாக நடைபெற இருந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிப்., 28லிருந்து, ஏப்., 25க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.