சினிமா செய்திகள்

சரித்திர கதையில் சூர்யா? + "||" + Surya in the historical story?

சரித்திர கதையில் சூர்யா?

சரித்திர கதையில் சூர்யா?
சரித்திர கதையம்சம் உள்ள படங்களுக்கு வரவேற்பு உள்ளது.
சரித்திர கதையம்சம் உள்ள படங்களுக்கு வரவேற்பு உள்ளது. மணிரத்னம் பொன்னியின் செல்வன் சரித்திர கதையை 2 பாகங்களாக இயக்கி வருகிறார். மோகன்லால் மரக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழ், மலையாள மொழிகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான பாகுபலி படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. வடிவேலுவின் இம்சை அரசன் 23-ம் புலிகேசி படமும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் சூர்யாவும் சரித்திர கதையம்சம் உள்ள படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் வசந்தபாலன் சமீபத்தில் சூர்யாவை சந்தித்து சரித்திர படத்துக்கான கதையை சொன்னதாகவும் கதை பிடித்து போனதால் அந்த படத்தில் நடிக்க சூர்யா சாதகமான முடிவை தெரிவித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வசந்தபாலன் ஏற்கனவே வெயில். அங்காடி தெரு, அரவான், காவியத்தலைவன் படங்களை இயக்கி உள்ளார். ஏற்கனவே சுந்தர்.சியும் சூர்யாவிடம் சரித்திர கதை ஒன்றை கூறியிருக்கிறார்.