சினிமா செய்திகள்

புதிய தோற்றத்தில் விக்ரம் பிரபு + "||" + Vikram Prabhu in new look

புதிய தோற்றத்தில் விக்ரம் பிரபு

புதிய தோற்றத்தில் விக்ரம் பிரபு
கும்கி படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி அதிக படங்களில் நடித்துள்ள விக்ரம் பிரபு தனி ரசிகர் கூட்டத்தை சேர்த்து வளர்ந்து வருகிறார்.
கும்கி படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி அதிக படங்களில் நடித்துள்ள விக்ரம் பிரபு தனி ரசிகர் கூட்டத்தை சேர்த்து வளர்ந்து வருகிறார். இவரது நடிப்பில் கடந்த வருடம் வானம் கொட்டட்டும், அசுர குரு ஆகிய படங்கள் வந்தன. முத்தையா இயக்கத்தில் நடித்த புலிக்குத்தி பாண்டி படம் கடந்த ஜனவரியில் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியானது. மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய தமிழரசன் இயக்கத்தில் டாணாக்காரன் என்ற படத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ளார். தமிழகத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளனர். இதில் விக்ரம் பிரபு வித்தியாசமான போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கையில் துப்பாக்கியுடன் நிற்கும் அவரது முதல் தோற்ற புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால் பஸ், மெட்ரோ ரெயில்களில் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணம்
அரசின் உத்தரவுப்படி, பஸ்கள், புறநகர் மின்சார ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில்களில் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். அலுவலக நேரங்களை தவிர, மற்ற நேரங்களில் பஸ்கள், ரெயில்கள் காற்று வாங்கின.
2. ‘பகையே காத்திரு’ படத்தில், விக்ரம் பிரபு
விக்ரம் பிரபு, ‘பகையே காத்திரு’ என்ற படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
3. ‘எடப்பாடி பழனிசாமி பெயரில் சொந்த வீடு, நிலம் இல்லை’ சொத்து பட்டியலில் புதிய தகவல்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயரில் சொந்த வீடு, நிலம் கிடையாது என்று வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த வருமான வரி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
4. மயிலாடுதுறை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகம் கலெக்டர் லலிதா திறந்து வைத்தார்
மயிலாடுதுறை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை கலெக்டர் லலிதா திறந்து வைத்தார்.
5. கிழக்கு கடற்கரை சாலையில் வாகன வேகத்தை துல்லியமாக கண்காணித்து அபராதம் விதிக்கும் புதிய தொழில்நுட்பம்
கிழக்கு கடற்கரை சாலையில் விபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில் எலக்ட்ரானிக் பலகையுடன் ரேடார் கருவி மற்றும் நவீன கேமரா பொருத்தும் புதிய தொழில்நுட்பம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிகிறது.