சினிமா செய்திகள்

“மேலே ஆகாயம்... கீழே பாதாளம்... நடுவில் ஆனந்தம்” - ‘தீ இவன்’ படத்துக்காக சன்னி லியோன் கவர்ச்சி ஆட்டம் + "||" + "Heaven above ... Hell below ... Bliss in the middle" - Sunny Leone sexy game for the movie ‘Fire Ivan’

“மேலே ஆகாயம்... கீழே பாதாளம்... நடுவில் ஆனந்தம்” - ‘தீ இவன்’ படத்துக்காக சன்னி லியோன் கவர்ச்சி ஆட்டம்

“மேலே ஆகாயம்... கீழே பாதாளம்... நடுவில் ஆனந்தம்” - ‘தீ இவன்’ படத்துக்காக சன்னி லியோன் கவர்ச்சி ஆட்டம்
‘தீ இவன்’ படத்துக்காக “மேலே ஆகாயம்... கீழே பாதாளம்... நடுவில் ஆனந்தம்” என்ற பாடலுக்காக சன்னி லியோன் கவர்ச்சி ஆட்டம் போட்டு இருக்கிறார்.
‘சிந்துபாத்’ பட தயாரிப்பாளரும், ‘அடடா என்ன அழகு’ படத்தின் டைரக்டருமான ஜெயமுருகன் தற்போது, ‘தீ இவன்’ படத்துக்கு இசை யமைத்து டைரக்டு செய்து வருகிறார். இந்த படத்தில், கார்த்திக் கதாநாயகனாக நடிக் கிறார். கதாநாயகி, சுகன்யா. புதுமுகம் சுமன் ஜே. இன்னொரு நாயகனாக வருகிறார். அபிதா, ராதாரவி, சிங்கம்புலி, ஜான் விஜய், இளவரசு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

பொள்ளாச்சியில், 45 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், மும்பையிலும் நடைபெற இருக்கிறது. மும்பையில் நடைபெற இருக்கும் படப்பிடிப்பில், சன்னி லியோனின் கவர்ச்சி நடன பாடல் காட்சி படமாக்கப்படுகிறது. “மேலே ஆகாயம்...கீழே பாதாளம்... நடுவில் ஆனந்தம்” என்று தொடங்கும் அந்த பாடலை டைரக்டர் ஜெயமுருகனே எழுதியிருக்கிறார்.

“பொதுவாகவே கார்த்திக் என்றால் படப்பிடிப்புக்கு ஒழுங்காக வரமாட்டார் என்பார்கள். இந்த படத்தில் எப்படி?” என்ற கேள்விக்கு டைரக்டர் ஜெயமுருகன் பதில் அளித்தார்.

“நானும் பயந்துகொண்டேதான் அவரை அணுகினேன். ‘உங்களை பற்றி தயாரிப்பாளர்கள் மத்தியில் நிறைய புகார்கள் உள்ளன. கார்த்திக்கை வைத்து படம் எடுக்காதீர்கள்...அவரிடம் போய் மாட்டிக் கொள்ளாதீர்கள்’ என்று சிலர் பயமுறுத்தினார்கள். அதையெல்லாம் மீறி, உங்களிடம் வந்து இருக் கிறேன். நான் சரியாக நடந்து கொள்வேன். என்னைப்போல் நீங்களும் சரியாக இருப்பீர்களென எதிர்பார்க்கிறேன்” என்று அவரிடமே கூறினேன்.

அதற்கு அவர், ‘என்னை ஏமாற்ற முயற்சிப்பவர்களைத்தான் நான் ஏமாற்றுவேன். என்னிடம் சரியாக இருந்தால், நானும் சரியாக இருப்பேன்’ என்று சொன்னார். அவர் சொன்னபடி, இதுவரை அவரால் எந்த பிரச்சினையும் இல்லை” என்று ஜெயமுருகன் பதில் அளித்தார்.