சினிமா செய்திகள்

யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் மற்றொரு படம், ‘மண்டேலா’ + "||" + Yogi Babu will play the protagonist Another film, ‘Mandela’

யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் மற்றொரு படம், ‘மண்டேலா’

யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் மற்றொரு படம், ‘மண்டேலா’
யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் மற்றொரு படத்துக்கு, ‘மண்டேலா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
முன்னணி நகைச்சுவை நடிகராகி விட்ட யோகி பாபு, மேலும் ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்துக்கு, ‘மண்டேலா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ‘தர்மம்’ என்ற குறும் படத்துக்காக தேசிய விருது பெற்ற மடோன் அஷ்வின், கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டராக அறிமுகம் ஆகிறார்.

யோகி பாபு கதாநாயகனாக நடிக்க, அவருடன் ஷிலா ராஜ்குமார், கண்ணா ரவி, ஜி.எம்.சுந்தர், சங்கிலி முருகன் ஆகியோரும் நடிக் கிறார்கள். யோகி பாபு இதுவரை ஏற்றிராத வேடத்தில் நடிக்கிறார். எஸ்.சசிகாந்த் தயாரிக்கிறார்.

இது முற்றிலும் தேர்தல் அரசியலை மையப் படுத்திய நகைச்சுவை படம். ஒவ்வொருவரும் தாங்கள் நடந்து வந்த பாதையையும், கடந்து வந்த பிரச்சினைகளையும் நினைவூட்டும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டு இருப்பதாக டைரக்டர் மடோன் அஷ்வின் கூறுகிறார்.

படப்பிடிப்பு திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. யோகி பாபு நடித்து வரும் ‘வீரப்பனின் கஜானா’ படத்தின் பெயர் மாறுகிறது
காடுகளையும், அதன் அழகையும் எடுத்துக் காட்டும் விதமாக, ‘வீரப்பனின் கஜானா’ என்ற படம் தயாராகி வந்தது. படத்தின் பெயரை மாற்றும்படி சந்தன கடத்தல் மன்னன் வீரப்பனின் குடும்பத்தினர், படக்குழுவினரிடம் கேட்டுக்கொண்டார்கள். அதற்கு படக்குழுவினரும் சம்மதித்து இருக்கிறார்கள்.