சினிமா செய்திகள்

சூர்யா பட நடிகருக்கு கொரோனா தொற்று + "||" + Corona infection to Surya film actor

சூர்யா பட நடிகருக்கு கொரோனா தொற்று

சூர்யா பட நடிகருக்கு கொரோனா தொற்று
பிரபல இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய். இவர் தமிழில் சூர்யாவுடன் அஞ்சான், விஷாலின் சமர் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார்.
பிரபல இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய். இவர் தமிழில் சூர்யாவுடன் அஞ்சான், விஷாலின் சமர் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். இந்தியில் அதிக படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். இரண்டு தேசிய விருதுகளும் வாங்கி இருக்கிறார். தற்போது மனோஜ் பாஜ்பாய் புதிய இந்தி படத்தில் நடித்து வந்தார். அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் மனோஜ் பாஜ்பாய்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து மும்பையில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. மராட்டிய மாநிலத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது. இதனால் அங்கு மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் இந்தி நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தாக்கிய 2 வாரத்தில் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து: ஆய்வில் தகவல்
கொரோனா தாக்கிய 2 வாரத்தில் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து அதிகரித்துள்ளதாக ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்- பா.ம.க.வினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பா.ம.க.வினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
3. மேலும் 15 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
4. 22 பேருக்கு கொரோனா
மதுரை மாவட்டத்தில் நேற்று 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
5. 6 பேருக்கு கொரோனா உறுதி
6 பேருக்கு கொரோனா உறுதி