சினிமா செய்திகள்

கொரோனாவில் இருந்து மீண்டு படப்பிடிப்புக்கு தயாரான சூர்யா + "||" + Surya ready to shoot back from Corona

கொரோனாவில் இருந்து மீண்டு படப்பிடிப்புக்கு தயாரான சூர்யா

கொரோனாவில் இருந்து மீண்டு படப்பிடிப்புக்கு தயாரான சூர்யா
நடிகர் சூர்யாவுக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதியாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
நடிகர் சூர்யாவுக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதியாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ''எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை உணர்வோம். பயத்துடன் முடங்க முடியாது. பாதுகாப்பும் கவனமும் அவசியம்'' என்று கூறியிருந்தார். சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறி வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். இதனால் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படப்பிடிப்பு அவர் இல்லாமலேயே பூஜையுடன் தொடங்கியது. இதர நடிகர் நடிகைகள் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் சூர்யா சில தினங்களுக்கு முன்பு கொரோனாவில் இருந்து பூரணமாக குணமடைந்தார். இதையடுத்து பாண்டிராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் இன்று (திங்கட்கிழமை) முதல் அவர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இது சூர்யாவுக்கு 40-வது படம். இதில் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு ஆகியோரும் உள்ளனர். வினய் வில்லனாக வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. மேலும் ஒருவருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
2. கரூரில் 19 பேருக்கு கொரோனா
கரூரில் 19 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
3. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,677- பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,677- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுளது.
4. கடலூரில் டெங்கு காய்ச்சல்; 9 பேருக்கு பாதிப்பு உறுதி
கடலூரில் டெங்கு காய்ச்சல் பாதித்த 9 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
5. 11-வது மெகா முகாம்: 12 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் நடைபெற்ற 11-வது மெகா தடுப்பூசி முகாமில் 12 லட்சத்து 1,832 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. சென்னையில் 1 லட்சம் பேர் போட்டுக்கொண்டனர்.