சினிமா செய்திகள்

வைரலாகும் புகைப்படம் புளிய மரத்தில் தொங்கிய கார்த்தி + "||" + Viral photo of Karthi hanging from a fermented tree

வைரலாகும் புகைப்படம் புளிய மரத்தில் தொங்கிய கார்த்தி

வைரலாகும் புகைப்படம் புளிய மரத்தில் தொங்கிய கார்த்தி
நடிகர் கார்த்தி இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையில் விருப்பம் உள்ளவர். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் கருத்துக்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.
நடிகர் கார்த்தி இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையில் விருப்பம் உள்ளவர். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் கருத்துக்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். செங்கல்பட்டு அருகே விவசாய நிலங்களை நேரில் பார்த்து காளையை ஏரில் பூட்டி உழுத புகைப்படங்களை வெளியிட்டார். ‘நமது ஆணி வேரான விவசாயத்தை அனைவரும் காப்போம். விவசாயிகளை சந்தித்த அனுபவம் மூலம் இயற்கையான காற்று, கால்நடை, கோழி ஆகிய அனைத்தும் கண்முன் வந்து செல்கின்றன’ என்றார். இந்த நிலையில் தற்போது புளியமரத்தில் ஏறி கிளைகளை பிடித்தபடி தலைகீழாக கார்த்தி தொங்கும் புகைப்படத்தை தனது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதில் ‘நான் சிறிய வயதில் புளியமரம் ஏறி விளையாடியது நினைவுக்கு வந்தது. இப்போது மீண்டும் எனது சொந்த கிராமத்தில் புளியமரம் ஏறி இருக்கிறேன்’ என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகிறது. கார்த்தி நடித்துள்ள சுல்தான் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. அம்மன் வேடத்தில் தமன்னா.... வைரலாகும் புகைப்படம்
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை தமன்னாவின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
2. காதலருடன் தீபாவளி கொண்டாடிய ஸ்ருதிஹாசன்.. வைரலாகும் புகைப்படம்
லாபம் படத்தை தொடர்ந்து சலார் படத்தில் நடித்து வரும் நடிகை ஸ்ருதிஹாசன், தனது காதலருடன் சேர்ந்து தீபாவளி பண்டிகை கொண்டாடி இருக்கிறார்.
3. அஜித்துடன் மோகன்லால்... வைரலாகும் வீடியோ
பிரபல மலையாள நடிகர் மோகன்லால், தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் அஜித்துடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
4. வைரலாகும் மாளவிகா மோகனனின் கவர்ச்சி போட்டோஷூட்
ரஜினி, விஜய் படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வரும் மாளவிகா மோகனன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
5. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்ட தனுஷ்... வைரலாகும் புகைப்படங்கள்
செல்வராகவனின் மனைவியும் இயக்குனருமான கீதாஞ்சலி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் தனுஷ் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.