சினிமா செய்திகள்

சர்ச்சையில் சிக்கிய தடகள வீராங்கனை வாழ்க்கை படமாகிறது + "||" + Controversial athlete's life becomes a movie

சர்ச்சையில் சிக்கிய தடகள வீராங்கனை வாழ்க்கை படமாகிறது

சர்ச்சையில் சிக்கிய தடகள வீராங்கனை வாழ்க்கை படமாகிறது
தமிழகத்தை சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை சாந்தி சவுந்தரராஜன் வாழ்க்கை சினிமா படமாகிறது.
தமிழகத்தை சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை சாந்தி சவுந்தரராஜன் வாழ்க்கை சினிமா படமாகிறது. இவர் இந்தியாவுக்கு 12 சர்வதேச பதக்கங்களையும், தமிழகத்துக்கு 50-க்கும் மேற்பட்ட பதக்கங்களையும் பெற்று கொடுத்துள்ளார். ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழ் பெண் ஆவார். ஆசிய விளையாட்டு போட்டியில் நடத்தப்பட்ட பாலின சோதனை அறிக்கை அடிப்படையில் அவருக்கு பெண்களுக்கான போட்டியில் தகுதி மறுக்கப்பட்டு அவர் வென்ற வெண்கல பதக்கம் திரும்ப பெறப்பட்டது. தடகள போட்டிகளில் இருந்தும் அவர் வெளியேற்றப்பட்டார். சாந்தி சவுந்தரராஜன் வாழ்க்கையில் நடந்த திருப்பங்கள் நிறைந்த சம்பவங்களை மையமாக வைத்து திரைக்கதை எழுதப்பட்டு அவரிடம் ஒப்புதல் பெற்று இந்த படம் தயாராவதாக படத்தின் இயக்குனர் ஜெயசீலன் தவப்புதல்வி தெரிவித்துள்ளார். சாந்தி சவுந்தரராஜன் கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை நடிக்கிறார். இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பு செய்கிறார். புதுக்கோட்டை அருகே உள்ள சாந்தி சவுந்தரராஜன் கிராமத்தில் படப்பிடிப்பை தொடங்கி பஞ்சாப், கத்தார். ஓமன் ஆகிய இடங்களில் நடத்துகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 5-வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு: சென்னையில் மழை நின்றும் தண்ணீர் வடியாத சோகம்
சென்னையில் மழை நின்றும் தண்ணீர் வடியாத சோகம் சில இடங்களில் இருக்கிறது. அங்கு மோட்டார் பம்புகள் மூலம் நீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
2. அதிரடி திருப்பங்களுடன் உண்மை சம்பவம் படமாகிறது
‘காத்தவராயன்’, ‘இ.பி.கோ 302’ ஆகிய படங்களை இயக்கிய சலங்கை துரை, ‘கடத்தல்’ என்ற புதிய படத்தை டைரக்டு செய்து வருகிறார்.
3. கிரிக்கெட் வீரர் கங்குலி வாழ்க்கை சினிமா படமாகிறது
கிரிக்கெட் வீரர்கள் டோனி, சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கை ஏற்கனவே திரைப்படமாக வெளிவந்து வரவேற்பை பெற்றன.
4. ஜெயலலிதா வாழ்க்கை கதை 'தலைவி' படத்துக்கு தணிக்கையில் ‘யு’ சான்று
ஜெயலலிதா வாழ்க்கை கதை 'தலைவி' படத்துக்கு தணிக்கையில் ‘யு’ சான்று.
5. பறக்கும் சீக்கியரின் வாழ்க்கை தரும் பாடம்
‘பறக்கும் சீக்கியர்’ என்று இந்தியாவே போற்றி புகழ்ந்த 91 வயது தடகள வீரர் மில்காசிங், கொடிய கொரோனாவின் நச்சு கரங்கள் தீண்டி மறைந்துவிட்டார்.