சினிமா செய்திகள்

சென்னையில் தொடங்கியது மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினி + "||" + Rajini started shooting in Chennai again

சென்னையில் தொடங்கியது மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினி

சென்னையில் தொடங்கியது மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினி
கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு ஐதராபாத்தில் ரஜினிகாந்தின் அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியபோது படக்குழுவை சேர்ந்த 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு ஐதராபாத்தில் ரஜினிகாந்தின் அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியபோது படக்குழுவை சேர்ந்த 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் படப்பிடிப்பை நிறுத்தினர். ரஜினிகாந்துக்கு பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என்பது உறுதியானது. ஆனாலும் சில நாட்கள் ஐதராபாத்தில் தனிமைப்படுத்திக்கொண்டார். பின்னர் ரத்த அழுத்த பிரச்சினை காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார். உடல்நிலையை கருதி அரசியலுக்கு வரவில்லை என்றும் அறிவித்தார். வீட்டில் ஓய்வு எடுத்து வந்த அவர் போயஸ் கார்டனில் தனுஷ் கட்டும் புதிய வீட்டுக்கான பூமி பூஜையில் பங்கேற்றார். இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவுக்கு சென்றும் பார்வையிட்டார். இந்தநிலையில் தற்போது அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி உள்ளது. ரஜினிகாந்த் ஐதராபாத் செல்வது சிரமம் என்று கருதிய படக்குழுவினர் சென்னையிலேயே அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்துகிறார்கள். 30 நாட்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இதில் ரஜினிகாந்த் பங்கேற்று நடித்து வருகிறார். குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 4 பேர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். பிரகாஷ்ராஜ், சூரி. சதீஷ் ஆகியோரும் உள்ளனர். சிவா இயக்குகிறார். அண்ணாத்த தீபாவளியில் திரைக்கு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மருத்துவமனையில் கமல்... விக்ரம் படப்பிடிப்பில் மாற்றம்
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
2. படப்பிடிப்பில் காயம் அடைந்த மாளவிகா மோகனன்
பேட்ட, மாஸ்டர் படங்களில் நடித்து பிரபலமான நடிகை மாளவிகா மோகனன், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்து இருக்கிறார்.
3. கமலிடம் நலம் விசாரித்தார் ரஜினி
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் கமலை, நடிகர் ரஜினிகாந்த் போன் மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து இருக்கிறார்.
4. 2 புது படங்களில் ரஜினி
ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்டதால் மேலும் 2 படங்களில் நடிப்பதை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
5. படப்பிடிப்பில் விபத்து அருண் விஜய் காயம்
ஹரி இயக்கும் புதிய படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார்.