சினிமா செய்திகள்

ஆஸ்கார் போட்டியில் இருந்து வெளியேறிய சூர்யாவின் சூரரைப்போற்று + "||" + From the Oscar competition Surya kicked out of the curaraipporru

ஆஸ்கார் போட்டியில் இருந்து வெளியேறிய சூர்யாவின் சூரரைப்போற்று

ஆஸ்கார் போட்டியில் இருந்து வெளியேறிய சூர்யாவின் சூரரைப்போற்று
ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட படங்களின் இறுதி பட்டியலில் சூர்யாவின் சூரரைப்போற்று இடம்பெறவில்லை.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப்போற்று படம் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. இந்த படத்தை ஆஸ்கார் விருதுக்கான பொது பிரிவில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டியிட அனுப்பி வைத்தனர். இறுதிகட்ட பரிந்துரை பட்டியலில் இடம்பெற தகுதியான படங்கள் பட்டியலிலும் சூரரைப்போற்று படம் இருந்தது. இது சூர்யா ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட படங்களின் இறுதி பட்டியலை தற்போது வெளியிட்டு உள்ளனர். இந்த பட்டியலில் சூரரை போற்று இடம்பெறவில்லை. பிரியங்கா சோப்ரா நடித்துள்ள ‘த வொயிட் டைகர்’ ஹாலிவுட் படம் இடம் பெற்றுள்ளது. 

ஏற்கனவே இந்தியா சார்பில் ஆஸ்கார் போட்டிக்கு அனுப்பப்பட்ட மலையாள படமான ஜல்லிக்கட்டு வெளியேறிய நிலையில் இப்போது சூரரைப்போற்று படமும் வெளியேறி இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.