சினிமா செய்திகள்

காதலில் நடிகை ரைசா? + "||" + Actress Raisa in love?

காதலில் நடிகை ரைசா?

காதலில் நடிகை ரைசா?
நடிகை ரைசா சமூக வலைத்தளத்தில் ஒரு இளைஞர் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த இளைஞர் ரைசாவின் வெளிநாட்டு காதலரா? என்று ரசிகர்கள் வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன், பியார் பிரேமா காதல் படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடித்தார். இந்த படம் வெற்றி பெற்றது. தற்போது த சேஸ், காதலிக்க யாருமில்லை உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளத்திலும் ரைசா அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

அரைகுறை ஆடையில் கவர்ச்சி புகைப்படங்களையும் பதிவேற்றுகிறார். இந்த நிலையில் ஒரு இளைஞர் மடியில் உட்கார்ந்திருக்கும் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை ரைசா வலைத்தளத்தில் தற்போது பகிர்ந்துள்ளார். ரைசாவை அந்த இளைஞரும் கட்டிப்பிடித்தபடி இருக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது. 

ரைசாவுடன் இருக்கும் இளைஞர் யார் என்று தெரியவில்லை. அந்த இளைஞர் ரைசாவின் வெளிநாட்டு காதலரா? என்று ரசிகர்கள் வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதற்கு இதுவரை அவர் பதில் சொல்லவில்லை. விரைவில் புகைப்படத்தில் நெருக்கமாக இருப்பவர் யார் என்பதை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.