சினிமா செய்திகள்

ஜப்பான் பட விழாவில் தனுசின் அசுரன் + "||" + Dhanush's monster at the Japan Film Festival

ஜப்பான் பட விழாவில் தனுசின் அசுரன்

ஜப்பான் பட விழாவில் தனுசின் அசுரன்
ஜப்பானில் நடைபெற உள்ள ‘ஒஸாக்கா’ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவும் அசுரன் படம் தேர்வாகி உள்ளது.
வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படம் 2019-ல் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து இருந்தார். பசுபதி, பிரகாஷ் ராஜ், வெங்கடேஷ், அம்மு அபிராமி, கென் கருணாஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வந்தனர். இதில் தனுஷ் வயதானவராகவும், இளைஞராகவும் இரு தோற்றங்களில் வந்தார். சாதி வேற்றுமை, அரசியல், பழிவாங்கல் உள்ளிட்ட அம்சங்களை மையமாக வைத்து அதிரடி படமாக தயாராகி இருந்தது. 

அசுரன் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. அசுரன் படம் பல்வேறு சர்வதேச படவிழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளையும் பெற்றுள்ளது. தற்போது ஜப்பானில் நடைபெற உள்ள ‘ஒஸாக்கா’ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவும் அசுரன் படம் தேர்வாகி உள்ளது. சிறந்த படத்துக்கான விருது பிரிவிலும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இது தனுஷ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.