சினிமா செய்திகள்

ரூ.200 கோடியில் பாகுபலி 3-ம் பாகம் + "||" + Rs 200 crore budget in Bahubali 3rd part

ரூ.200 கோடியில் பாகுபலி 3-ம் பாகம்

ரூ.200 கோடியில் பாகுபலி 3-ம் பாகம்
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, நாசர், அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடித்து 2015-ல் திரைக்கு வந்த பாகுபலி படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.
2017-ல் வெளியான பாகுபலி 2-ம் பாகம் படமும் வெற்றி பெற்றது. இரண்டு பாகங்களும் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தது. இந்த நிலையில் பாகுபலி படத்தின் 3-ம் பாகத்தை இயக்க ராஜமவுலி தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை தியேட்டர்களுக்கு பதிலாக ஓ.டி.டி. தளத்தில் நேரடியாக வெளியிட திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. பாகுபலி 3-ம் பாகத்தை ரூ.200 கோடி செலவில் 9 தொடர்களாக எடுக்க முடிவு செய்துள்ளனர். திரைப்படமாக எடுக்க அதிக வருடங்கள் பிடிக்கும் என்பதால் குறுகிய காலத்தில் படமாக்கி ஓ.டி.டி.யில் வெளியிடுகிறார்கள். பாகுபலி 3-ம் பாகத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜமவுலி தற்போது ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் முடிந்ததும் பாகுபலி 3-ம் பாகத்தை தொடங்குகிறார்.