சினிமா செய்திகள்

திறமையானவர்கள் இயக்குனர்களை பாராட்டிய லாவண்யா + "||" + Lavanya praised the talented directors

திறமையானவர்கள் இயக்குனர்களை பாராட்டிய லாவண்யா

திறமையானவர்கள் இயக்குனர்களை பாராட்டிய லாவண்யா
தமிழில் சசிகுமார் ஜோடியாக ‘பிரம்மன்’ படத்தில் நடித்தவர் லாவண்யா திரிபாதி. சந்தீப் கிஷன் ஜோடியாக மாயவன் படத்திலும் நடித்துள்ளார்.
தமிழில் சசிகுமார் ஜோடியாக ‘பிரம்மன்’ படத்தில் நடித்தவர் லாவண்யா திரிபாதி. சந்தீப் கிஷன் ஜோடியாக மாயவன் படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், “நான் சினிமா துறைக்கு வந்து பல படங்களில் நடித்து இருந்தாலும் வெற்றி படம் எதுவும் கொடுக்கவில்லை என்று பேசுகிறார்கள். ஆனால் நான் சரியாக நடிக்கவில்லை என்று யாரும் சொல்ல மாட்டார்கள். எனக்கு கொடுத்த கதாபாத்திரத்துக்கு நூறு சதவீதம் உழைக்க வேண்டும் என்று அக்கறை எடுக்கிறேன். பெரிய கதாநாயகர்களுடன் நடிக்க வேண்டும் என்ற லட்சியம் எனக்கு இல்லை. எந்த இயக்குனர் படங்களில் நடிக்க விருப்பம் உள்ளது என்று கேட்டால் பத்து பேர் பெயரை சொல்வேன். கதாபாத்திரங்களை வெளிப்படுத்துவதில் ஒவ்வொரு இயக்குனருக்கும் தனி திறமை இருக்கிறது. அவரவர் கோணத்தில் ஸ்டையில் காட்டுகிறார்கள். இப்போது நிறைய படங்களில் நடித்து வருகிறேன்’’ என்றார்.