சினிமா செய்திகள்

திரிஷா படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்? + "||" + Trisha movie to be released on ODT?

திரிஷா படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்?

திரிஷா படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்?
கொரோனா திரையுலகில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஊரடங்கு தளர்வில் தியேட்டர்களை திறந்தும் ரசிகர்கள் படம் பார்க்க ஆர்வம் காட்டவில்லை.
கொரோனா திரையுலகில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஊரடங்கு தளர்வில் தியேட்டர்களை திறந்தும் ரசிகர்கள் படம் பார்க்க ஆர்வம் காட்டவில்லை. ஒரு காட்சிக்கு 10 அல்லது 15 பேர் மட்டுமே வருவதாக கூறப்படுகிறது. இதனால் சமீபத்தில் வெளியான முன்னணி நடிகர்களின் படங்கள் தோல்வியை சந்தித்துள்ளன. இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் கவனம் ஓ.டி.டி. தளங்கள் பக்கம் திரும்பி உள்ளது. ஏற்கனவே சூர்யாவின் சூரரைப்போற்று, ஜெயம் ரவியின் பூமி, விஜய்சேதுபதி நடித்துள்ள க.பெ.ரணசிங்கம், மாதவனின் சைலன்ஸ், ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன், கீர்த்தி சுரேசின் பென்குயின் உள்ளிட்ட படங்கள் தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை மீறி ஓ.டி.டி. தளங்களில் வெளிவந்தன. இந்த நிலையில் திருஞானம் இயக்கத்தில் திரிஷா நடித்துள்ள பரமபதம் விளையாட்டு படத்தையும் ஓ.டி.டி.யில் வெளியிட பேச்சுவார்த்தை நடக்கிறது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தியேட்டர்களில் வெளியாக இருந்த பரமபதம் விளையாட்டு கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜெயலலிதா வாழ்க்கை கதை தலைவி படம் 2-ம் பாகம்?
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையாக தயாராகி உள்ள தலைவி படத்துக்கு ரசிகர்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
2. ஹரீஸ் கல்யாண்-பிரியா பவானி சங்கருடன் ‘ஓ மணப்பெண்ணே’
காதலுக்கும், காமெடிக்கும் முக்கியத்துவம் உள்ள படங் களுக்கு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினர் மத்தி யிலும் வரவேற்பு இருந்து வருகிறது என்பதற்கு உதாரணம், ‘பெல்லி சூப்புலு’ என்ற தெலுங்கு படம்.
3. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் படம்
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் படம்.
4. பண நெருக்கடியால் 9 வருடம் முடங்கிய நயன்தாரா படம்
பண நெருக்கடியால் 9 வருடம் முடங்கிய நயன்தாரா படம்.
5. உலகப்பட விழாவில் நயன்தாரா படம்
உலகப்பட விழாவில் நயன்தாரா படம்.