சினிமா செய்திகள்

விஜய் சேதுபதியின் 46-வது படம் + "||" + Vijay Sethupathi's 46th film

விஜய் சேதுபதியின் 46-வது படம்

விஜய் சேதுபதியின் 46-வது படம்
விஜய்சேதுபதி 2010-ல் வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.
விஜய்சேதுபதி 2010-ல் வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். பீட்சா, சூது கவ்வும், நானும் ரவுடிதான். சேதுபதி, தர்மதுரை, விக்ரம் வேதா, 96 உள்ளிட்ட படங்கள் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தின. தற்போது வில்லனாகவும் நடிக்கிறார். விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்த வில்லன் கதாபாத்திரம் பேசப்பட்டது. மறைந்த ஜனநாதன் இயக்கத்தில் நடித்துள்ள லாபம் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. யாதும் ஊரே யாவரும் கேளிர் பட வேலைகளும் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இந்தநிலையில் விஜய்சேதுபதி அடுத்து நடிக்க உள்ள புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை பொன்ராம் இயக்குகிறார். இவர் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா ஆகிய படங்களை இயக்கியவர். பொன்ராம் இயக்கும் படத்தில் விஜய்சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல் பரவி வருகிறது. இது அவருக்கு 46-வது படம். ஜோடியாக நடிக்க அனு கீர்த்தியிடம் பேசுவதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜெயலலிதா வாழ்க்கை கதை தலைவி படம் 2-ம் பாகம்?
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையாக தயாராகி உள்ள தலைவி படத்துக்கு ரசிகர்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
2. விஜய் சேதுபதியின் ‘மால்’
விஜய் சேதுபதி 10 மாடிகளை கொண்ட பிரமாண்டமான ‘மால்’ ஒன்றை கூடுவாஞ்சேரியில் கட்டுகிறார்.
3. ஹரீஸ் கல்யாண்-பிரியா பவானி சங்கருடன் ‘ஓ மணப்பெண்ணே’
காதலுக்கும், காமெடிக்கும் முக்கியத்துவம் உள்ள படங் களுக்கு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினர் மத்தி யிலும் வரவேற்பு இருந்து வருகிறது என்பதற்கு உதாரணம், ‘பெல்லி சூப்புலு’ என்ற தெலுங்கு படம்.
4. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் படம்
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் படம்.
5. பண நெருக்கடியால் 9 வருடம் முடங்கிய நயன்தாரா படம்
பண நெருக்கடியால் 9 வருடம் முடங்கிய நயன்தாரா படம்.