சினிமா செய்திகள்

காச நீட்டும் ஆள ஆக்கு அவுட்டு பிரபுதேவாவின் தேர்தல் விழிப்புணர்வு பாடல் + "||" + Prabhu Deva's election awareness song

காச நீட்டும் ஆள ஆக்கு அவுட்டு பிரபுதேவாவின் தேர்தல் விழிப்புணர்வு பாடல்

காச நீட்டும் ஆள ஆக்கு அவுட்டு பிரபுதேவாவின் தேர்தல் விழிப்புணர்வு பாடல்
தமிழக சட்டமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடக்கிறது. அனைத்து கட்சி வேட்பாளர்களும் வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்கி உள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடக்கிறது. அனைத்து கட்சி வேட்பாளர்களும் வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்கி உள்ளனர். தேர்தல் ஆணையம் அனைவரும் வாக்களிக்க விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா தேர்தலுக்கான விளம்பர தூதராக இருந்து தேர்தல் விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடி உள்ளார். இந்த பாடல் வலைதளத்தில் வைரலாகிறது. பிரபுதேவா பாடி உள்ள பாடலில், “என்னத்துக்கு நோட்டு. எனக்கு ஒரு டவுட்டு காச நீட்டி ஓட்டு கேட்கும் ஆள ஆக்கு அவுட்டு. ஓட்டு நம்ம உரிமை உணர்ந்து கிட்டா பெருமை. காச வாங்கி ஓட்டு போட்டா தீர்ந்திடுமா வறுமை'' போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. 100 சதவீதம் வாக்கு, எனது வாக்கு விற்பனைக்கு அல்ல போன்ற விழிப்புணர்வு வாசகங்களும் பாடலில் இடம்பெற்று உள்ளது. 2019 பாராளுமன்ற தேர்தலிலும் இதுபோல் விழிப்புணர்வு பாடலை பிரபுதேவா பாடி இருந்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. விழிப்புணர்வு நிகழ்ச்சி
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
2. ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் உலக கல்லீரல் நோய் தடுப்பு தின விழிப்புணர்வு கருத்தரங்கம்
ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் உலக கல்லீரல் நோய் தடுப்பு தின விழிப்புணர்வு கருத்தரங்கம்.
3. கொரோனா பரவல் குறித்து போலீசார் விழிப்புணர்வு
கொரோனா பரவல் குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
4. கொரோனா தடுப்பூசியை புறக்கணிக்கும் மலைவாழ் மக்கள்
பேச்சிப்பாறை அருகே மலைவாழ் மக்கள் தடுப்பூசியை புறக்கணித்து வரும் நிலையில் அந்த பகுதியில் தொற்று அதிகரித்து வருகிறது. எனவே, மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
5. கொரோனா விழிப்புணர்வு பிரசார வாகனங்கள் தொடக்கம்
கொரோனா விழிப்புணர்வு பிரசார வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டது