சினிமா செய்திகள்

தயாரிப்பாளர் மீது நடிகை புகார் + "||" + Actress complains about producer

தயாரிப்பாளர் மீது நடிகை புகார்

தயாரிப்பாளர் மீது நடிகை புகார்
நடிகைகள் மீ டூவில் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது தொடர்ந்து பாலியல் புகார் கூறி வருகிறார்கள்.
நடிகைகள் மீ டூவில் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது தொடர்ந்து பாலியல் புகார் கூறி வருகிறார்கள். தற்போது இந்தி படங்கள் மற்றும் டி.வி. தொடர்களில் நடித்துள்ள திவ்யங்கா திரிபாதி தனக்கும் மோசமான அனுபவங்கள் ஏற்பட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் நடிக்க வந்த புதிதில் சில ஆண்கள் என்னிடம் அநாகரிகமான முறையில் அணுகினார்கள். இதன் மூலம் எனக்கு சில மோசமான அனுபவங்கள் ஏற்பட்டன. தொல்லைகளை சந்தித்தேன். முடியாது என்று சொன்னதால் வாய்ப்புகளை தடுக்க முயற்சி செய்தார்கள். எல்லா ஆண்களும் அப்படித்தான் என்று சொல்லவில்லை. மன ரீதியாக சித்ரவதையை உணர்ந்தேன். அந்த அழுத்தமும் விரக்தியும் என்னை வடிவமைத்தது. ஒரு நிகழ்ச்சியில் தயாரிப்பாளரின் அநாகரிகமான நடத்தையால் மனம் உடைந்தேன். எனது சுய கவுரவத்தை இழந்து தொழிலில் நீடிக்க விருப்பம் இல்லை. இதனால் ஒரு நிகழ்ச்சியைவிட்டே வெளியேறினேன். அந்த தயாரிப்பாளரின் பெயரை வெளியிட நான் விரும்பவில்லை'' என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. நான் மிகமிக துணிச்சலான பெண்: நடிகை சோனியா அகர்வால்
பல படங்களில் நான் சாதுவான பெண்ணாகவே நடித்து உள்ளேன். இயல்பாக நான் மிகமிக துணிச்சலான பெண் என்று சோனியா அகர்வால் தெரிவித்துள்ளார்.
2. காதலன் மீது புகார் கொடுத்த ஜூலி; காதலன் கூறிய தகவல்களால் குழப்பமடைந்த போலீசார்
போலீசார் நடத்திய விசாரணையில் ஜூலியின் காதலன் மனீஷ் கூறிய தகவல்கள் போலீசாரையே குழப்பமடைய வைத்திருக்கிறது.
3. காதலன் மீது நடிகை ஜூலி பரபரப்பு புகார்..!
நடிகை ஜூலி தனது காதலர் மீது இன்று போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
4. விஜய்சேதுபதி படக்குழு மீது இளையராஜா புகார்
விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் புதிய படத்தின் மீது இசையமைப்பாளர் இளையராஜா புகார் கொடுத்து இருக்கிறார்.
5. பிரபல சின்னத்திரை நடிகை வீட்டில் கொள்ளை - போலீஸ் விசாரணை
கேரளாவில் பிரபல சின்னத்திரை நடிகை வீட்டில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளை நடந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.