சினிமா செய்திகள்

இந்தியன்-2 படப்பிடிப்பு தாமதமாவது ஏன்? காஜல் அகர்வால் விளக்கம் + "||" + Why is the shooting of Indian-2 delayed? Kajal Agarwal Description

இந்தியன்-2 படப்பிடிப்பு தாமதமாவது ஏன்? காஜல் அகர்வால் விளக்கம்

இந்தியன்-2 படப்பிடிப்பு தாமதமாவது ஏன்? காஜல் அகர்வால் விளக்கம்
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு தொடர்ந்து தாமதமாகி வருகிறது. ஏற்கனவே கிரேன் விழுந்த விபத்தினால் படப்பிடிப்பை நிறுத்தினர். பின்னர் கொரோனா தடங்கலாக வந்தது. தற்போது கமல்ஹாசன் தேர்தலில் தீவிரமாகி இருக்கிறார். விக்ரம் என்ற இன்னொரு படத்தில் நடிப்பதாகவும் அறிவித்து உள்ளார். இதனால் இந்தியன்-2 படத்தின் கதி என்ன என்று பலரும் பேச ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் இந்தியன்-2 படப்பிடிப்புக்கான தாமதத்தை காஜல் அகர்வால் வெளியிட்டு இருக்கிறார். அவர் கூறும்போது, “இந்தியன்-2 படத்தில் அமெரிக்காவை சேர்ந்த தொழில் நுட்ப கலைஞர்கள் பலர் பணியாற்றுகின்றனர். அவர்கள் இந்தியாவுக்கு வந்து இந்தியன்-2 படத்தில் பணியாற்ற வேண்டி உள்ளது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக அவர்களால் இந்தியாவுக்கு வர முடியவில்லை. அதனால்தான் இந்தியன்-2 படப்பிடிப்பை நடத்த முடியவில்லை. இந்தியன்-2 படப்பிடிப்புக்கான தாமதத்துக்கு இதுதான் காரணம். கமல்ஹாசன், ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன்-2 படத்தில் நடிப்பது எனக்கு பெருமையாக உள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறேன்'’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘துப்பறிவாளன் 2’ மீண்டும் தொடங்குவது எப்போது? - விஷால் விளக்கம்
கடந்த ஓராண்டாக ‘துப்பறிவாளன் 2’ குறித்து எந்தவித தகவலையும் வெளியிடாமல் இருந்த விஷால், தற்போது அதுகுறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
2. வரலாற்று திரிபை சரிசெய்யும் நோக்கிலேயே தமிழ்நாடு நாள் அறிவிப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் விளக்கம்
வரலாற்று திரிபை சரிசெய்யும் நோக்கிலேயே தமிழ்நாடு நாள் குறித்த அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு இருக்கிறார் என ஓ.பன்னீர்செல்வத்துக்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் தெரிவித்துள்ளார்.
3. காஜல் அகர்வால் மகிழ்ச்சி
காஜல் அகர்வால் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வலைத்தளத்தில் வெளியிட்டு திருமண நாள் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
4. உடல்நலம் பாதிப்பா? - நடிகர் ராமராஜன் தரப்பு விளக்கம்
பிரபல நடிகரும், இயக்குனருமான ராமராஜன், அடுத்ததாக இரண்டு படங்களில் நடிப்பதற்காக தன்னை தயார்படுத்தி வருகிறாராம்.
5. அது உண்மையல்ல... வதந்தி - ‘தர்மதுரை’ இரண்டாம் பாகம் குறித்து சீனு ராமசாமி விளக்கம்
தர்மதுரை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக, படத்தின் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் சமீபத்தில் அறிவித்திருந்தார்.