சினிமா செய்திகள்

பாடல் வரிகளால் சர்ச்சை; தனுஷ் பட டைரக்டருக்கு மிரட்டல் + "||" + Controversy over lyrics; Threat to Dhanush film director

பாடல் வரிகளால் சர்ச்சை; தனுஷ் பட டைரக்டருக்கு மிரட்டல்

பாடல் வரிகளால் சர்ச்சை; தனுஷ் பட டைரக்டருக்கு மிரட்டல்
‘கலைப்புலி’ எஸ்.தாணு என்றாலே ‘பிரமாண்டம்’ தான் நினைவுக்கு வரும். இவரும், தேசிய விருது பெற்ற நாயகன் தனுசும் ‘கர்ணன்’ படத்தில் இணைந்து பணிபுரிகிறார்கள்.
தனுஷ், ‘அசுரன்’ படத்தை அடுத்து நடித்துள்ள படம், இது. மாரி செல்வராஜ் டைரக்டு செய்து இருக்கிறார்.தனுசுக்கு ஜோடியாக ரெஜிஷா விஜயன் நடித்து இருக்கிறார். இவர் நடிக்கும் முதல் தமிழ் படம் இது. லால், நட்ராஜ், யோகிபாபு, லட்சுமி பிரியா ஆகியோரும் நடித்துள்ளனர்.படத்துக்காக திருநெல்வேலி 
அருகில் ஒரு கிராமமே உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடந்தது.

தனுசின் ‘கொடி’, ‘வட சென்னை’ ஆகிய படங் களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன், இந்தப் படத்துக்கு இசையமைத்து இருக்கிறார். படத்தை அடுத்த மாதம் (ஏப்ரல்) திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில், படத்தில் இடம்பெறும் 3 பாடல்கள் வெளியிடப்பட்டன. அதில், ‘திரவுபதி முத்தம் யாருக்கு?’ என்ற பாடல் வரிகள் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளன. இது தொடர்பாக டைரக்டர் மாரி செல்வராஜூக்கு மிரட்டல்கள் வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு தனுஷ் தேர்வு- சிறந்த துணை நடிகர் பிரிவில் விஜய் சேதுபதி தேர்வு
சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2. ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் தனுஷ்
தனுஷ், ‘தி க்ரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார்.
3. கோபத்தில் தனுஷ்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட முயற்சிகள் நடந்ததை தனுஷ் எதிர்த்தார்.
4. ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுசின் 43-வது படம்
தனுஷ் ஏற்கனவே ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து இந்தியில் அந்த்ரங்கி ரே படத்தில் நடித்தார்.