சினிமா செய்திகள்

இளசுகள் பிச்சைக்காரர்கள் போன்று கிழிந்த ஜீன்ஸை அணிய வேண்டாம் - கங்கனா ரணாவத் + "||" + Kangana Ranaut joins ripped jeans debate, shares how not to look like 'homeless beggars'

இளசுகள் பிச்சைக்காரர்கள் போன்று கிழிந்த ஜீன்ஸை அணிய வேண்டாம் - கங்கனா ரணாவத்

இளசுகள் பிச்சைக்காரர்கள் போன்று கிழிந்த ஜீன்ஸை அணிய வேண்டாம் - கங்கனா ரணாவத்
இளசுகள் பிச்சைக்காரர்கள் போன்று கிழிந்த ஜீன்ஸை அணிய வேண்டாம் என நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
மும்பை,

உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரி தீரத் சிங் ராவத் பெண்கள் கிழிந்த ஜீன்ஸ் அணிவதை விமர்சித்தது சர்ச்சையாகி உள்ளது. அவர் பேசும்போது, “இளைய தலைமுறையினர் நாகரிகம் என்ற பெயரில் கிழிந்த ஜீன்ஸ் அணிகிறார்கள்.

இளம்பெண்களும் அணிகிறார்கள். நான் விமானத்தில் பயணித்தபோது தொண்டு நிறுவனம் நடத்தும் ஒரு பெண் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து இருந்தார். அவரால் சமூகத்தில் நல்ல தாக்கத்தை எப்படி உருவாக்க முடியும்’' என்றார். அவரது பேச்சை கண்டிக்கும் வகையில் நடிகைகளும், இளம்பெண்களும் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். 

இந்த நிலையில் நடிகை கங்கனா ரணாவத்தும் லேசாக கிழிந்த ஜீன்ஸ் அணிந்துள்ள தனது புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு, “கிழிந்த ஜீன்ஸ் அணிய விரும்பினால் இந்த புகைப்படத்தில் குளிர்ச்சியாக இருப்பது போன்ற ஜீன்ஸை அணியுங்கள். 

அது ஸ்டைலாக தெரியும். அதற்கு மாறாக வீடு இல்லாத பிச்சைக்காரர்கள் போன்று கிழிந்த ஜீன்ஸை அணிய வேண்டாம். இளசுகள் பலர் தற்போது இப்படித்தான் அணிகிறார்கள்'' என்றார். 

இந்த கருத்துக்கு சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சிலர் கங்கனா அரைகுறை ஆடையில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் தீபிகா படுகோனே, சாரா அலிகான், டாப்சி, ஆலியா பட் உள்ளிட்டோரின் கிழிந்த ஜீன்ஸ் புகைப்படங்களை வெளியிட்டு இவர்களைத்தான் கங்கனா ரணாவத் சாடி உள்ளார் என்று பதிவுகள் வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘எமர்ஜென்சி’ என்ற பெயரில் இந்திராகாந்தி படத்தை கங்கனா ரணாவத் இயக்குகிறார்
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு டைரக்டர் விஜய் இயக்கத்தில், ‘தலைவி’ என்ற பெயரில் படமாகி இருக்கிறது.
2. "ஏ.எல்.விஜய் அளவிற்கு தன்னை மரியாதையாக எந்த இயக்குநரும் நடத்தியதில்லை" - நடிகை கங்கனா ரணாவத்
ஏ.எல்.விஜய் அளவிற்கு தன்னை மரியாதையாக எந்த இயக்குநரும் நடத்தியதில்லை என்று தலைவி பட நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
3. அவதூறு வழக்கில் நடிகை கங்கனா ரணாவத்துக்கு பிடிவாரண்டு-மும்பை கோர்ட்டு உத்தரவு
அவதூறு வழக்கில் நடிகை கங்கனா ரணாவத்துக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மும்பை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4. நடிகை கங்கனாவுக்கு எதிரான வழக்கு; விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு
நடிகை கங்கனாவுக்கு எதிரான வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நடிகை கங்கனாவுக்கு எதிரான வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.