சினிமா செய்திகள்

"ஏ.எல்.விஜய் அளவிற்கு தன்னை மரியாதையாக எந்த இயக்குநரும் நடத்தியதில்லை" - நடிகை கங்கனா ரணாவத் + "||" + No One Treat me like Director AL Vijay Says Thalaivi Movie Actors Kangana Ranaut

"ஏ.எல்.விஜய் அளவிற்கு தன்னை மரியாதையாக எந்த இயக்குநரும் நடத்தியதில்லை" - நடிகை கங்கனா ரணாவத்

"ஏ.எல்.விஜய் அளவிற்கு தன்னை மரியாதையாக எந்த இயக்குநரும் நடத்தியதில்லை" - நடிகை கங்கனா ரணாவத்
ஏ.எல்.விஜய் அளவிற்கு தன்னை மரியாதையாக எந்த இயக்குநரும் நடத்தியதில்லை என்று தலைவி பட நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
சென்னை,

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் இந்தி நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், ’தலைவி’ படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டது. டிரைலர் வெளியிட்டு விழா நிகழ்ச்சியில் நடிகை கங்கனா ரணாவத் பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் பேசிய கங்கனா, ஏ.எல்.விஜய் அளவிற்கு தன்னை மரியாதையாக எந்த இயக்குநரும் நடத்தியதில்லை’ என்று கூறி கண் கலங்கினார்.

’தலைவி’ திரைப்படம் ஏப்ரல் 23-ம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, நேற்று அறிவிக்கப்பட்ட 2019-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில் நடிகை கங்கனா ரணாவத்திற்கு 'மணிகர்னிகா: ஜான்சி ராணி' மற்றும் 'பங்கா' படங்களுக்காக சிறந்த நடிகை விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ‘எமர்ஜென்சி’ என்ற பெயரில் இந்திராகாந்தி படத்தை கங்கனா ரணாவத் இயக்குகிறார்
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு டைரக்டர் விஜய் இயக்கத்தில், ‘தலைவி’ என்ற பெயரில் படமாகி இருக்கிறது.