சினிமா செய்திகள்

நடிகை ராஷ்மிகாவை பாராட்டிய கார்த்தி + "||" + Praising actress Rashmika Karthi

நடிகை ராஷ்மிகாவை பாராட்டிய கார்த்தி

நடிகை ராஷ்மிகாவை பாராட்டிய கார்த்தி
''என் படங்களான தீரன் ஒரு ரகம், கைதி ஒரு ரகமா இருக்க, அடுத்து சுல்தான் வருகிறது. சுல்தான் படத்தில் ராஷ்மிகா எனக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். நடிகர் கார்த்தி அளித்த பேட்டி வருமாறு.
ராஷ்மிகா சரியான விளையாட்டுப் பெண். தமிழில் நிறைய வாய்ப்புகள் வந்தும் எல்லாம் ஒரே மாதிரியா இருக்க. ஒரு கிராமத்து கதாபாத்திரத்துக்காக காத்திருந்து இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். நான்கு மொழிகள் பேசுகிறார். ராஷ்மிகாவுக்கு வட இந்தியாவிலும் ரசிகர்கள் உள்ளனர். படப்பிடிப்பில் லூட்டி அடித்தபடி இருப்பார். ஆனால், என்ன ஆச்சரியம்னா ஷாட்டுக்குள்ள வந்ததும் அது வரைக்கும் அடிச்ச லூட்டி மறைஞ்சு கேரக்டரா மாறி சரியா வசனம் பேசி அசத்துவார். அவரது நடிப்பு மலைக்க வைத்தது. ராஷ்மிகாவுக்கு இந்திய சினிமாவில் பெரிய எதிர்காலம் உள்ளது. மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் அதிகமான நடிகர்களுடன் இணைந்து நடிப்பது புது அனுபவம். மணிரத்னம் படம் என்பதால் அனைவரும் மாணவர்களாக மாறிப்போவது ஒரு மேஜிக். அது கற்பனை கொஞ்சமே கலந்த நிஜ வரலாறு இல்லையா.? ஆயிரம் வருடங்கள் கடந்த அந்த சரித்திரத்தை எழுத கல்கி எவ்வளவு ஆராய்ச்சி செய்திருப்பார். அதை காட்சியில் கொண்டு வருவதற்கு மணிரத்னம்தான் சரியான தேர்வு. இவ்வாறு கார்த்தி கூறினார்.