சினிமா செய்திகள்

நடிகர் சல்மான் கான் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் + "||" + Salman Khan Receives His First Shot Of COVID-19 Vaccine. See What He Tweeted

நடிகர் சல்மான் கான் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்

நடிகர் சல்மான் கான் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்
நடிகர் சல்மான்கான் இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார்.
மும்பை,

நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், மார்ச் 1 ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் உள்ளவர்களுக்கும் 60-வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

இதையடுத்து, நாடு முழுவதும் அரசியல், திரைப் பிரபலங்கள் என பல்வேரு தரப்பினரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.  இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டார்.  

முன்னதாக நேற்று நடிகர் சஞ்செய் தத் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களையும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சஞ்செய் தத் பகிர்ந்து இருந்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் இதுவரை 47.3 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 4.7 கோடி பேர் 3-வது டோஸ் ‘பூஸ்டர்’ தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. இந்தியாவில் செலுத்திய கொரோனா தடுப்பூசி 128.66 கோடி
இந்தியாவில் இதுவரை செலுத்திய கொரோனா தடுப்பூசி 128.66 கோடி ஆக உயர்ந்து உள்ளது.
3. ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் திறம்பட செயல்படாது - மாடர்னா தடுப்பூசி நிறுவனம்!
ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக செயல்படும் தடுப்பூசிகளை கண்டறிந்து தயாரிப்பதற்கு அதிக மாதங்கள் ஆகலாம் என்று தெரிவித்துள்ளது.
4. கேரளாவில் கொரோனா தடுப்பூசி போட மறுக்கும் 5 ஆயிரம் ஆசிரியர்கள்
கேரளாவில் 5 ஆயிரம் ஆசிரியர்கள் மதத்தை காரணம் காட்டி கொரோனா தடுப்பூசி போட மறுத்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5. 2 ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை அதிகம்: மத்திய சுகாதார மந்திரி தகவல்
2 ‘டோஸ் ’ கொரோனா தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை அதிகமாகி உள்ளதாக மத்திய சுகாதார மந்திரி தெரிவித்துள்ளார்.