சினிமா செய்திகள்

டைரக்டரான மோகன்லால் + "||" + Director Mohanlal

டைரக்டரான மோகன்லால்

டைரக்டரான மோகன்லால்
மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் மோகன்லால். இவர் தமிழில் இருவர், உன்னைப்போல் ஒருவன், ஜில்லா, காப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
 தற்போது பரோஸ் என்ற படம் மூலம் டைரக்டராகி உள்ளார். இந்த படம் 3 டி தொழில் நுட்பத்தில் குழந்தைகளுக்கான படமாக தயாராகிறது. படத்தில் பிரிதிவிராஜ், பிரதாப் போத்தன், பாஸ்வேகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு தொடங்கி இருப்பதாக சமூக வலைத்தளத்தில் மோகன்லால் தெரிவித்து உள்ளார். இந்தி நடிகர் அமிதாப்பச்சன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “மோகன்லால் இயக்கும் பரோஸ் படத்துக்கு எனது வாழ்த்துகள். வெற்றியும், உயர்வும் கிடைக்கட்டும்'' என்று கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்த மோகன்லால் உங்கள் வாழ்த்தை நன்றியோடு ஏற்கிறேன். உங்களுடைய ஆசீர்வாதம் என்னை மகிழ்ச்சியோடு வைத்திருக்கும் என்று கூறியுள்ளார். மோகன்லால் பட பூஜையில் நடிகர்கள் மம்முட்டி, திலீப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கோவிலுக்குள் காரில் சென்று சர்ச்சையில் சிக்கிய நடிகர் மோகன்லால்
மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் மோகன்லால்.