சினிமா செய்திகள்

கொரோனாவை எதிர்க்க உடற்பயிற்சி அவசியம்-ரகுல் பிரீத் சிங் + "||" + To oppose the corona Exercise is essential Rahul Preet Singh

கொரோனாவை எதிர்க்க உடற்பயிற்சி அவசியம்-ரகுல் பிரீத் சிங்

கொரோனாவை எதிர்க்க உடற்பயிற்சி அவசியம்-ரகுல் பிரீத் சிங்
கார்த்தி ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து பிரபலமான ரகுல் பிரீத் சிங் தற்போது சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்திலும் நடித்துள்ளார்.
 3 இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். அவர் சினிமாவிலும், விளம்பர படங்களிலும் நடித்து சம்பாதிப்பதோடு சொந்தமாக உடற்பயிற்சி மையங்களும் நடத்துகிறார். 

ரகுல் பிரீத் சிங் அளித்துள்ள பேட்டியில், “நான் சினிமாவில் நடித்துக்கொண்டே உடற்பயிற்சி மையம் தொடங்கியது எல்லோருக்குமே தெரியும். ஆரம்பத்தில் உடற்பயிற்சி கூடம் இளைஞர்களால் நிரம்பி வழிந்தது. நல்ல வருமானமும் வந்தது. ஆனால் ஊரடங்கு காலத்தில் வியாபாரம் சுத்தமாக அடிவாங்கியது. அந்த நேரத்தில் நஷ்டமும் ஏற்பட்டது. ஆனாலும் என்னிடம் வேலை பார்த்த அனைத்து ஊழியர்களுக்கும் முழு சம்பளமும் கொடுத்தேன். 

இப்போது வியாபாரம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டு இருக்கிறது. உடற்பயிற்சி மையம் தொடங்கிய பிறகு கஷ்டமோ நஷ்டமோ எது வந்தாலும் சோர்ந்து போய்விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். இன்னொரு தடவை ஊரடங்கு வராமல் இருந்தால் நல்லது. உடற்பயிற்சி மூலம் கொரோனாவை எதிர்த்து நிற்கலாம். அதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்'' என்றார்.