சினிமா செய்திகள்

வைரலாகும் புகைப்படம் நடிகை நயன்தாராவுக்கு திருமண நிச்சயதார்த்தம்? + "||" + Viral photo Actress Nayantara is engaged to be married?

வைரலாகும் புகைப்படம் நடிகை நயன்தாராவுக்கு திருமண நிச்சயதார்த்தம்?

வைரலாகும் புகைப்படம் நடிகை நயன்தாராவுக்கு திருமண நிச்சயதார்த்தம்?
நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் தமிழ் பட உலகில் பரபரப்பாக பேசப்படும் காதல் ஜோடியாக வலம் வருகிறார்கள்.
நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் தமிழ் பட உலகில் பரபரப்பாக பேசப்படும் காதல் ஜோடியாக வலம் வருகிறார்கள். 2015-ல் நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் நெருக்கமாகி 6 வருடமாக காதலை தொடர்கிறார்கள். ஜோடியாக சுற்றும் புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுகிறார்கள். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று ரசிகர்களும் வலைத்தளத்தில் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த வருடத்தில் அவர்கள் திருமணம் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை தற்போது வெளியிட்டு உள்ளார். அந்த படத்தில் விக்னேஷ் சிவன் மார்பில் நயன்தாரா சாய்ந்து இருக்கிறார். நயன்தாராவின் கையில் பிளாட்டினம் மோதிரம் பளிச்சிடுகிறது. இருவரின் முகமும் மறைந்துள்ளது. அந்த மோதிர புகைப்படத்தின் கீழ், “விரலோடு உயிர்கூட கோர்த்து'' என்ற பதிவையும் விக்‌னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை வைத்து நயன்தாரா கையில் அணிந்து இருப்பது நிச்சயதார்த்த மோதிரம் என்றும் விக்னேஷ் சிவனுக்கும் அவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என்றும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. அந்த புகைப்படத்தின் கீழ் நிச்சயதார்த்தம் முடிந்த இருவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள் என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். ஆனாலும் நிச்சயதார்த்தம் நடந்ததா? என்பதை இருவரும் உறுதிப்படுத்தவில்லை. நயன்தாரா தற்போது ரஜினியுடன் அண்ணாத்த, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. மாநாடு வெற்றியை கொண்டாடிய சிம்பு... வைரலாகும் புகைப்படம்
பல போராட்டங்களுக்குப் பிறகு சிம்பு நடிப்பில் வெளியாகி இருக்கும் மாநாடு திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
2. அம்மன் வேடத்தில் தமன்னா.... வைரலாகும் புகைப்படம்
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை தமன்னாவின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
3. காதலருடன் தீபாவளி கொண்டாடிய ஸ்ருதிஹாசன்.. வைரலாகும் புகைப்படம்
லாபம் படத்தை தொடர்ந்து சலார் படத்தில் நடித்து வரும் நடிகை ஸ்ருதிஹாசன், தனது காதலருடன் சேர்ந்து தீபாவளி பண்டிகை கொண்டாடி இருக்கிறார்.
4. அஜித்துடன் மோகன்லால்... வைரலாகும் வீடியோ
பிரபல மலையாள நடிகர் மோகன்லால், தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் அஜித்துடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
5. வைரலாகும் மாளவிகா மோகனனின் கவர்ச்சி போட்டோஷூட்
ரஜினி, விஜய் படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வரும் மாளவிகா மோகனன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.