சினிமா செய்திகள்

அனிருத்துக்கு பதில் சந்தோஷ் நாராயணன் விக்ரம் புதிய படத்தில், இசையமைப்பாளர் திடீர் மாற்றம் + "||" + In Vikram new film, Sudden change of composer

அனிருத்துக்கு பதில் சந்தோஷ் நாராயணன் விக்ரம் புதிய படத்தில், இசையமைப்பாளர் திடீர் மாற்றம்

அனிருத்துக்கு பதில் சந்தோஷ் நாராயணன் விக்ரம் புதிய படத்தில், இசையமைப்பாளர் திடீர் மாற்றம்
விக்ரமுடன் அவருடைய மகன் துருவ் இணைந்து நடிக்கிறார். விக்ரம் ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார்.
நடிகர் விக்ரம் இதுவரை 59 படங்களில் நடித்து இருக்கிறார். அவருடைய 60-வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் டைரக்டு செய்கிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. தற்காலிகமாக, ‘சியான்-60’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

இதில் விக்ரமுடன் அவருடைய மகன் துருவ் இணைந்து நடிக்கிறார். விக்ரம் ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். ஒரு முக்கிய வேடத்தில் பாபிசிம்ஹா நடிக்கிறார். அவர் நடித்து முடித்துள்ள ‘கோப்ரா’, ‘துருவநட்சத்திரம்’, ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர இருக்கின்றன.

இதையடுத்து, ‘சியான்-60’ படம் தயாராகிறது. இந்த படத்துக்கு முதலில் அனிருத் இசையமைப்பார் என்று கூறப்பட்டது. இப்போது அவர் மாற்றப்பட்டு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

இதற்கு என்ன காரணம்? என்று விசாரித்தபோது, “அனிருத் ஏற்கனவே ஒப்புக்கொண்ட பட வேலைகளில், ‘பிஸி’யாக இருப்பதால், அவரால் ‘சியான்-60’ படத்தில் பணிபுரிய முடியவில்லை. அதனால்தான் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்” என்று கூறப்பட்டது.