சினிமா செய்திகள்

வில்லன் நடிகருக்கு கொரோனா தொற்று + "||" + Corona infection to villain actor

வில்லன் நடிகருக்கு கொரோனா தொற்று

வில்லன் நடிகருக்கு கொரோனா தொற்று
பிரபல வில்லன் நடிகர் மிலிந்த் சோமனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
பிரபல வில்லன் நடிகர் மிலிந்த் சோமனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியானது. தனக்கு கொரோனா தொற்று இருக்கும் தகவலை மிலிந்த் சோமன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்து உள்ளார்.

மிலிந்த் சோமன் தமிழில், கவுதம் மேனன் இயக்கத்தில் சரத்குமார், ஜோதிகா, ஆண்ட்ரியா ஆகியோர் நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் குரூர வில்லனாக அறிமுகமானார். தொடர்ந்து கார்த்தியின் பையா, அலெக்ஸ் பாண்டியன் படங்களிலும் வில்லனாக நடித்து இருந்தார். இந்தியில் அதிக படங்களில் நடித்து முன்னணி வில்லன் நடிகராக இருக்கிறார். கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. மராட்டியத்தில் அதிகமானோருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மும்பையில் தங்கி உள்ள நடிகர்கள் கொரோனா தொற்றில் சிக்குகிறார்கள். இரு தினங்களுக்கு முன்பு நடிகர்கள் அமீர்கான், மாதவன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. மேலும் ஒருவருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
2. கரூரில் 19 பேருக்கு கொரோனா
கரூரில் 19 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
3. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,677- பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,677- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுளது.
4. கடலூரில் டெங்கு காய்ச்சல்; 9 பேருக்கு பாதிப்பு உறுதி
கடலூரில் டெங்கு காய்ச்சல் பாதித்த 9 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
5. 11-வது மெகா முகாம்: 12 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் நடைபெற்ற 11-வது மெகா தடுப்பூசி முகாமில் 12 லட்சத்து 1,832 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. சென்னையில் 1 லட்சம் பேர் போட்டுக்கொண்டனர்.