கதை எழுதி படம் தயாரிப்பது ஏன்? ஏ.ஆர்.ரகுமான் விளக்கம்


கதை எழுதி படம் தயாரிப்பது ஏன்? ஏ.ஆர்.ரகுமான் விளக்கம்
x
தினத்தந்தி 27 March 2021 1:05 AM GMT (Updated: 27 March 2021 1:05 AM GMT)

இந்திய பட உலகில் முன்னனி இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் விருதையும் வென்றுள்ளார். தற்போது 99 ஸாங்க்ஸ் என்ற படத்துக்கு கதை எழுதி தயாரித்து இருக்கிறார்.

இந்திய பட உலகில் முன்னனி இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் விருதையும் வென்றுள்ளார். தற்போது 99 ஸாங்க்ஸ் என்ற படத்துக்கு கதை எழுதி தயாரித்து இருக்கிறார். இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. படத்துக்கு கதை எழுதி தயாரிப்பாளரானது குறித்து ஏ.ஆர்.ரகுமான் கூறும்போது, ‘தமிழ் நாட்டில் பிறந்த எனக்கு வட இந்தியாவிலும் அங்கீகாரம் கிடைத்தது. அதன்பிறகு லண்டனில் பாம்பே டிரீம்ஸ் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு வந்தது. பலர் என்னிடம் படம் எடுக்க கதை இருக்கிறதா? என்று கேட்டனர். அதன்பிறகுதான் படத்துக்கு கதை எழுதும் எண்ணம் தோன்றியது. நிறைய கற்க தொடங்கினேன். சில பயிற்சி பட்டறைகளிலும் பங்கேற்றேன். பின்னர் இந்த படத்துக்கான கதை உருவானது. இந்த கதை பலருக்கும் பிடித்து இருந்ததால் விஸ்வேஸ் கிருஷ்ணமூர்த்தியை இயக்குனராக ஒப்பந்தம் செய்து இஹானை நாயகனாக தேர்வு செய்து படப்பிடிப்பை நடத்தினோம். நமக்கு வயதாகும்போது இளம் தலைமுறையினரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்'' என்றார்.

Next Story