ஆன்லைனில் தேர்தல் பிரசாரம் கொரோனா பரவலை தடுக்க நடிகை யோசனை


ஆன்லைனில் தேர்தல் பிரசாரம் கொரோனா பரவலை தடுக்க நடிகை யோசனை
x
தினத்தந்தி 27 March 2021 1:14 AM GMT (Updated: 27 March 2021 1:14 AM GMT)

தமிழகத்தில் கொரோனா தொற்றில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் முககவசம் அணியவும், கைகளை கிருமிநாசினியால் கழுவவும் சுகாதார துறை அதிகாரிகள் வற்புறுத்தி வருகிறார்கள்.

தமிழகத்தில் கொரோனா தொற்றில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் முககவசம் அணியவும், கைகளை கிருமிநாசினியால் கழுவவும் சுகாதார துறை அதிகாரிகள் வற்புறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரங்களிலும் வேட்பாளர்கள் ஓட்டு கேட்கும்போதும் கூட்டங்கள் கூடுவதால் கொரோனா பரவலாம் என்று விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. இதுகுறித்து பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகை ஆர்த்தி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “பிரசார கூட்டத்திற்கு வருபவர்களுக்கோ, கட்சிப்பணி ஆற்றுபவர்களுக்கோ கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் அந்த கட்சி அவர்களுக்கு பொறுப்பேற்குமா? எதுக்கு மக்கள் கூட்டம் இந்த கொரோனா காலத்தில்? எல்லா அரசியல்வாதிகளும் ஆன்லைனில் பிரசாரம் செய்யலாமே. மக்கள் நலன்தானே முக்கியம்'' என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது 30, 40 பேர் இருக்கும் வகுப்புகளிலேயே கொரோனா பரவி பள்ளி, கல்லூரிகளை மூடும் நிலைமை இருக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் பிரசார கூட்டங்களில் கொரோனா எப்படி பரவாமல் இருக்கும்'' என்றார். ஆர்த்தியின் பதிவுக்கு ஆதரவாக பலரும் வலைத்தளத்தில் கருத்துகள் பதிவிட்டு வருகிறார்கள்.

Next Story