சினிமா செய்திகள்

இந்தி படத்தில் வில்லனாக விஷால் + "||" + Vishal as the villain in the Hindi film

இந்தி படத்தில் வில்லனாக விஷால்

இந்தி படத்தில் வில்லனாக விஷால்
தமிழ் நடிகர்கள் இந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
தமிழ் நடிகர்கள் இந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். தனுஷ் ராஞ்சனா, ஷமிதாப் ஆகிய இந்தி படங்களில் நடித்துள்ளார். தற்போது அட்ராங்கி ரே என்ற இந்தி படத்தில் நடித்து முடித்துள்ளார். விஜய்சேதுபதி மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கிறார். நடிகர் விஷால் சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் இந்தி நடிகர் சோனுசூட்டை சந்தித்து கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு உதவிகள் செய்ததற்காக பாராட்டினார். அப்போது இந்தி படங்களில் நடிக்க வருமாறு விஷாலுக்கு சோனுசூட் அழைப்பு விடுத்தார். இந்த நிலையில் விரைவில் இந்தி படத்தில் நடிக்க விஷால் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விஷால் நடித்து 2018-ல் வெளியாகி வசூல் குவித்த இரும்புத்திரை படத்தின் இந்தி ரீமேக்கில் வில்லனாக விஷால் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் இரும்புத்திரையில் வில்லனாக அர்ஜூன் நடித்து இருந்தார். இந்தி பதிப்பில் நடிக்க கதாநாயகன் தேர்வு நடக்கிறது. விஷால் தற்போது துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். இந்த படம் முடிந்ததும் இந்திக்கு போவார் என்று தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. வில்லனாக - கதாநாயகனாக சத்யராஜின் 43 வருட சாதனை
தமிழ் பட உலகுக்கு பெருமை சேர்க்கும் நடிகர்களில் முக்கியமானவர், சத்யராஜ். இவர் திரையுலகுக்கு வந்து 43 வருடங்கள் ஆகின்றன.
2. வில்லனாக ஜெய்
கதாநாயகர்கள் வில்லன்களாக நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். விக்ரம் வேதா, மாஸ்டர் படங்களில் விஜய்சேதுபதி வில்லனாக வந்தார். என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய் வில்லன் வேடம் ஏற்றார். கார்த்திக், அர்ஜுன் ஆகியோரும் வில்லன்களாக நடித்துள்ளனர்.
3. மீண்டும் வில்லனாக அர்ஜுன்
கதாநாயகர்கள் வில்லனாக நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
4. விஷாலுடன் நடிக்கிறேனா? பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில் நாயகியாக அறிமுகமான பிரியா பவானி சங்கருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.
5. 'விக்ரம்' படத்தில் கமலுக்கு வில்லனாக பகத் பாசில்?
தேர்தல் முடிந்துள்ளதால் கமல்ஹாசன் புதிய படத்தில் நடிக்க தயாராகிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.