சினிமா செய்திகள்

கார்த்தியின் ‘கொம்பன்’ படம் 2-ம் பாகம் + "||" + Karthi's 'Komban' Movie Part 2

கார்த்தியின் ‘கொம்பன்’ படம் 2-ம் பாகம்

கார்த்தியின் ‘கொம்பன்’ படம் 2-ம் பாகம்
தமிழில் இரண்டாம் பாகம் படங்கள் அதிகம் வந்து வரவேற்பை பெற்றுள்ளன.
தமிழில் இரண்டாம் பாகம் படங்கள் அதிகம் வந்து வரவேற்பை பெற்றுள்ளன. ரஜினிகாந்தின் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் 2.0 என்ற பெயரில் வெளியானது. கமல்ஹாசனின் விஸ்வரூபம், அஜித்குமாரின் பில்லா, விக்ரம் நடித்த சாமி, தனுசின் வேலை இல்லா பட்டதாரி, விஷாலின் சண்டக்கோழி உள்ளிட்ட படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன. சூர்யாவின் சிங்கம் மற்றும் காஞ்சனா 3 பாகங்கள் வந்துள்ளன. தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. இந்த நிலையில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்து 2015-ல் திரைக்கு வந்த கொம்பன் படத்தின் இரண்டாம் பாகத்தை படமாக்கும் முயற்சிகள் நடக்கின்றன. கொம்பன் படத்தில் நாயகியாக லட்சுமி மேனன் நடித்து இருந்தார். ராஜ்கிரண், சூப்பர் சுப்பராயன், தம்பி ராமையா, கருணாஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வந்தார்கள். கார்த்தி, லட்சுமி மேனன் உள்பட முதல் பாகத்தில் நடித்தவர்களையே கொம்பன் இரண்டாம் பாகத்தில் நடிக்க வைக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தையும் முத்தையாவே இயக்குகிறார். கொம்பன் இரண்டாம் பாகத்தை சூர்யா தயாரிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. ஏற்கனவே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தையும் சூர்யா தயாரித்து இருந்தார்.