சினிமா செய்திகள்

பட வாய்ப்புக்காக கவர்ச்சிக்கு மாறிய இனியா + "||" + Iniya turned glamorous for the photo opportunity

பட வாய்ப்புக்காக கவர்ச்சிக்கு மாறிய இனியா

பட வாய்ப்புக்காக கவர்ச்சிக்கு மாறிய இனியா
தமிழ் படங்களில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் இனியா.
தமிழ் படங்களில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் இனியா. வாகை சூடவா படத்தில் நடித்த கதாபாத்திரமும், சர சர சாரக்காற்று வீசும்போது... பாடலுக்கு அவர் வெளிப்படுத்திய பார்வையும் அபிநயமும் ரசிகர்கள் கண்களில் இன்னமும் நிற்கின்றன. அந்த படத்துக்கு சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார். மவுனகுரு, அம்மாவின் கைப்பேசி, புலிவால், நான் சிகப்பு மனிதன், வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். ஆனாலும் இனியாவால் முன்னணி நடிகையாக உயர முடியவில்லை. தற்போது இனியாவுக்கு பட வாய்ப்புகளும் குறைந்துள்ளன. இதனால் மார்க்கெட்டை பிடிக்க கவர்ச்சிக்கு மாறி உள்ளார். எல்லை மீறிய தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் வைரலாகின்றன. குடும்ப பாங்கான இனியாவின் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர். பட வாய்ப்புகாக இப்படி இறங்கலாமா? என்று விமர்சிக்கவும் செய்கிறார்கள்.