சினிமா செய்திகள்

மாதவனின் தேர்தல் விழிப்புணர்வு வீடியோ + "||" + In Mathavan the Election Awareness Video

மாதவனின் தேர்தல் விழிப்புணர்வு வீடியோ

மாதவனின் தேர்தல் விழிப்புணர்வு வீடியோ
தேர்தல் ஆணையம் 100 சதவீதம் வாக்குப்பதிவுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடைபெற உள்ளது. அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்கள். தேர்தல் ஆணையம் 100 சதவீதம் வாக்குப்பதிவுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது. இந்த நிலையில் நடிகர் மாதவன் தேர்தல் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகிறது. வீடியோவில் நடிகர் மாதவன் பேசும்போது, ‘'என்னங்க, எப்படி இருக்கீங்க. தெரியும் இல்ல. ஏப்ரல் 6-ந்தேதி தேர்தல் வைத்து இருக்கிறோம். மறக்காமல் வந்து விடுங்கள். உங்கள் வீட்டு பக்கத்தில்தான். வந்து நல்லபடியாக ஓட்டு போட்டு விட்டு போங்கள். என்னடா ஒரு கல்யாணத்துக்கு அழைக்கிற மாதிரி அழைக்கிறேன் என்று பார்க்கிறீர்களா? இது நம் நாட்டோட கல்யாணம்தாங்க. அதில் முக்கியமான சிறப்பு விருந்தினர் நீங்கள்தான். அதனால் மறக்காமல் வந்து விடுங்கள். ஞாபகம் இருக்குல்ல ஏப்ரல் 6-ந்தேதி. 100 சதவீதம் வந்து விடுங்கள்.’’ என்று கூறியுள்ளார். ஏற்கனவே நடிகர் பிரபுதேவா, '''என்னத்துக்கு நோட்டு. எனக்கு ஒரு டவுட்டு காச நீட்டி ஓட்டு கேட்கும் ஆள ஆக்கு அவுட்டு. ஓட்டு நம்ம உரிமை உணர்ந்து கிட்டா பெருமை'' என்ற தேர்தல் விழிப்புணர்வு பாடலை வெளியிட்டு இருந்தார்.