சினிமா செய்திகள்

நடிகை மாதுரி தீட்சித் நடுவராகப் பங்கேற்கும் டிவி நடன நிகழ்ச்சி குழுவைச் சேர்ந்த 18 பேருக்கு கொரோனா + "||" + Crew members of Madhuri Dixit's reality show test positive for COVID-19

நடிகை மாதுரி தீட்சித் நடுவராகப் பங்கேற்கும் டிவி நடன நிகழ்ச்சி குழுவைச் சேர்ந்த 18 பேருக்கு கொரோனா

நடிகை மாதுரி தீட்சித் நடுவராகப் பங்கேற்கும்   டிவி நடன நிகழ்ச்சி  குழுவைச் சேர்ந்த 18 பேருக்கு கொரோனா
நடிகை மாதுரி தீட்சித் நடுவராகப் பங்கேற்கும் டான்ஸ் தீவானே என்கிற டிவி நடன நிகழ்ச்சியின் குழுவைச் சேர்ந்த 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
மும்பை

பிரபல நடிகையான மாதுரி தீட்சித், கடைசியாக 2019-ல் வெளியான கலான்க் என்கிற படத்தில் நடித்தார். 2018 முதல் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் தீவானே என்கிற நடன நிகழ்ச்சியின் நடுவராகப் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியின் 3-வது பருவம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் டான்ஸ் தீவானே படப்பிடிப்பில் பங்கேற்ற 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஒவ்வொரு வாரமும் படப்பிடிப்பு தொடங்கும் முன்பு குழுவினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் கொரோனா இல்லை என உறுதியான பிறகு படப்பிடிப்பில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள். 

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. தற்போது அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இதர ஊழியர்களைக் கொண்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.