சினிமா செய்திகள்

ரூ.6 கோடிக்கு கார் வாங்கிய பிரபாஸ் + "||" + Prabhas bought a car for Rs 6 crore

ரூ.6 கோடிக்கு கார் வாங்கிய பிரபாஸ்

ரூ.6 கோடிக்கு கார் வாங்கிய பிரபாஸ்
பிரபாஸ் புதிதாக ரூ.6 கோடி மதிப்புள்ள லம்போர்கினியின் அவெண்டடார் சொகுசு காரை வாங்கி இருக்கிறார்.
வசூல் சாதனை நிகழ்த்திய பாகுபலி படத்தில் நடித்து பிரபலமான பிரபாஸ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். தொடர்ந்து நடித்த சாஹோ படமும் வெற்றி பெற்றது. இந்த படங்கள் தமிழிலும் வெளியானதால் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாக இருக்கிறார். தற்போது ஆதிபுருஷ், ராதே ஷ்யாம் ஆகிய 2 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ஆதிபுருஷ் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகிறது. இதில் பிரபாஸ் ராமராக நடிக்கிறார். 

அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலிலும் பிரபாஸ் இடம் பிடித்துள்ளார். சாஹோ படத்துக்கு ரூ.70 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்பட்டது. தற்போது சம்பளத்தை ரூ.100 கோடியாக உயர்த்தி இருப்பதாகவும் லாபத்திலும் பங்கு கேட்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த நிலையில் பிரபாஸ் புதிதாக லம்போர்கினியின் அவெண்டடார் சொகுசு காரை வாங்கி இருக்கிறார். இந்த காரின் இந்திய மதிப்பு ரூ.6 கோடி ஆகும். இந்த காரை பிரபாஸ் சாலையில் ஓட்டி செல்லும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகிறது. ஏற்கனவே பிரபாஸ் ஜாக்குவார், பிஎம்டபுள்யூ, ரோல்ஸ் ராய்ஸ் போன்ற கார்களை வைத்து இருக்கிறார்.