சினிமா செய்திகள்

விபத்தில் இளம் பாடகர் பலி + "||" + Young singer killed in crash

விபத்தில் இளம் பாடகர் பலி

விபத்தில் இளம் பாடகர் பலி
பிரபல பஞ்சாபி இளம் பாடகர் தில்ஜான் விபத்தில் பலியானார்.
பிரபல பஞ்சாபி பாடகர் தில்ஜான். இவர் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து சொந்த ஊரான கார்தார்பூருக்கு காரில் சென்று கொண்டு இருந்தார். ஜாந்தியாலா குரு என்ற இடத்தில் சென்றபோது சாலையோரத்தில் நின்ற சரக்கு லாரி மீது தில்ஜான் கார் வேகமாக மோதியது. 

இந்த விபத்தில் தில்ஜான் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே இறந்து போனார். அவருக்கு வயது 31. தில்ஜானின் மனைவி மற்றும் குழந்தைகள் கனடாவில் உள்ளனர். 

தில்ஜான் மரணம் பஞ்சாப் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பலரும் அவரது மறைவுக்கு சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.