சினிமா செய்திகள்

சந்தானம் படத்தின் நடிகைக்கு கொரோனா தாய்-தந்தைக்கும் தொற்று + "||" + Corona mother-father infection for Santhanam film actress

சந்தானம் படத்தின் நடிகைக்கு கொரோனா தாய்-தந்தைக்கும் தொற்று

சந்தானம் படத்தின் நடிகைக்கு கொரோனா தாய்-தந்தைக்கும் தொற்று
சந்தானம் படத்தின் நடிகை வைபவி சாண்டில்யா கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவரது தாய், தந்தை ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சந்தானம் நடித்து திரைக்கு வந்த, ‘சக்கைபோடு போடு ராஜா’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் வைபவி சாண்டில்யா. தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து, கேப்மாரி, சர்வர் சுந்தரம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். வைபவி சாண்டில்யாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார். 

தனக்கு பசியின்மை, வாசனையின்மை, இருமல், சுவையின்மை போன்ற அறிகுறிகள் இருந்தன.‌ பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியானது எனது தாய், தந்தை ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்து உள்ளார். வைபவி சாண்டில்யா விரைவில் குணமடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். கொரோனா இரண்டாவது அலை தொற்றில் முன்னணி நடிகர்கள் சிக்குவது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் மாதவன், இந்தி நடிகர் அமீர்கான், வில்லன் நடிகர் பரேஷ் ராவல், மலையாள நடிகர் பக்ரு ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நேற்று முன்தினம் விஜய்யின் மாஸ்டர், கார்த்தி நடித்த கைதி படங்களை இயக்கிய டைரக்டர் லோகேஷ் கனகராஜுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.