சினிமா செய்திகள்

டைரக்டரான நடிகர் தினேஷ் + "||" + Actor Dinesh is the director

டைரக்டரான நடிகர் தினேஷ்

டைரக்டரான நடிகர் தினேஷ்
பிரபல நடிகர் தினேசும் தற்போது இயக்குனராகி உள்ளார்.
தமிழ் பட உலகில் நடிகர்கள் கமல்ஹாசன், அர்ஜூன், தனுஷ், ராகவா லாரன்ஸ், சிம்பு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் படங்கள் இயக்கி உள்ளனர். மலையாள நடிகர் மோகன்லாலும் சமீபத்தில் இயக்குனரானார். இந்த நிலையில் பிரபல நடிகர் தினேசும் தற்போது இயக்குனராகி உள்ளார். இவர் பா.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். 

ராஜுமுருகன் இயக்கிய குக்கூ படத்தில் பார்வையற்றவராக நடித்து பாராட்டு பெற்றார். வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்த விசாரணை படமும் பெயர் வாங்கி கொடுத்தது. ரஜினிகாந்தின் கபாலி படத்திலும் வந்தார். திருடன் போலீஸ், ஒரு நாள் கூத்து, உள்குத்து, அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட மேலும் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது வாராயோ வெண்ணிலாவே, பல்லு படாம பாத்துக்கோ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

இந்த நிலையில் தினேஷ் தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். அவர் டைரக்டு செய்து நடிக்கும் படத்துக்கு வயிறுடா என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. படத்தின் தலைப்பையும் போஸ்டரையும் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இயக்குரானதை அறிவித்து உள்ளார். திரையுலகினரும் ரசிகர்களும் தினேசுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.